ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஐபோன் 14 மொபைல்களுக்கு தட்டுப்பாடு.. காரணம் இதுதான்!

ஐபோன் 14 மொபைல்களுக்கு தட்டுப்பாடு.. காரணம் இதுதான்!

ஐ-போன்

ஐ-போன்

IPhone 14 : ஐ-போன்14 தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் இந்த போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐ-போன்14 தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் இந்த போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நேர்த்தி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு எப்போதுமே சந்தையில் தனி மவுசுதான். அது லேப்டாப்பாக இருந்தாலும், சரி செல்போன்களாக இருந்தாலும் சரி ஆப்பிள் தயாரிப்புகள் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

  அந்த வகையில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள்-14 மற்றும் ஆப்பிள் 14 மேக்ஸ் ரக செல்போன்கள் வாடிக்கையாளர்களைிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கோவிட் தொற்றால் ஆப்பிள்14 ரக செல்போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

  ஆப்பிள் 14 ரக செல்போன்கள் மத்திய சீனாவில் உள்ள செங்ஸோவ் நகரில் இருக்கும் ஆலையில் தான் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தொற்றும் பரவி வருகிறது. இதனால் சீன அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சீன அரசின் கட்டுப்பாடுகளால் இரண்டு லட்சம் தொழிலாளர்களை கொண்ட இந்த தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இதனால் ஆப்பிள் 14 ரக செல்போன்கள் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிறுதி மற்றும் விடுமுறைக்கால விற்பனையில் ஆப்பிள் 14 மற்றும் ஆப்பிள 14 மேக்ஸ் ரக செல்போன்கள் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் ஆப்பிள் 14 ரக செல்போன்களுக்கு டிமாண்ட் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆப்பிள் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

  Also Read : ட்விட்டரே வேண்டாம்.. கடையை மூடும் பயனாளர்கள்.. கூட்டத்தைக் கவரும் மஸ்டோடன் செயலி!

  ஆப்பிள் 14 ரக போன்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால் அதிக அளவில் இந்த ரக போன்களை உற்பத்தி  செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில் சீனாவில் மீண்டும் பரவும் கோவிட் தொற்றால் ஆப்பிள் 14 ரக போன்கள் தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 14 ரக போன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் பங்குச்சதையிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயிலும் டிசம்பர் மாதம் 8 விழுக்காடு குறையும் எனவும் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மீண்டும் பரவியுள்ள கோவிட் தொற்றால் சீனாவின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலைக்கு ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி சுணக்கம் தான் மிகப்பெரிய காரணமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவிக்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Apple, IPhone