Home /News /technology /

முன்கூட்டியே அறிமுகமாகும் ஐஃபோன் 14 – ஆப்பிள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி.!

முன்கூட்டியே அறிமுகமாகும் ஐஃபோன் 14 – ஆப்பிள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி.!

ஐஃபோன் 14

ஐஃபோன் 14

iPhone 14 | ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 14 சீரிஸ் ரிலீஸ் தள்ளி போடப்படவில்லை முன்கூட்டியே அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் Fall event என்ற நிகழ்வை நடத்தும். அதில் அந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தும். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகள் ஆன்லைன் வழியாகவே அறிமுகம் செய்யப்பட்டன. அதேபோல இந்த ஆண்டு, பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் ஐஃபோன் 14 எப்பொழுது ரிலீஸ் ஆகப்போகிறது என்பதைப்பற்றிய தேதியும் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் தேதி மாற்றம் செய்யப்படுகிறது என்று ஐ ஃபோன் யூஸர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மீண்டும் ஒருமுறை ஃபோன் 14 வெளியீட்டுத் தேதியில் மாற்றம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முறை ஆப்பிள் பிரியர்களுக்கு நற்செய்தி.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 14 சீரிஸ் ரிலீஸ் தள்ளி போடப்படவில்லை முன்கூட்டியே அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ₹79000 என்றும் இதனுடைய ஹையஸ்ட் மாடல் ₹1,00,000 வரைக்கும் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் மத்தியில் ஐஃபோன் 14 சீரிஸ் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து இருந்தது. ஆனால் இடையில் தேதி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது ஐஃபோன் 14 அறிமுகம், செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு தயாரிப்பை அறிமுகம் செய்ய ஒரு ஈவன்ட்டை ஆப்பிள் நிறுவனம் நடத்தாது. எனவே, ஆப்பிள் நடத்த இருக்கும் இந்த நிகழ்வில் பல ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.



ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸில், ஆப்பிள் 14 ஐஃபோன், ஆப்பிள் 14 ஐஃபோன் மேக்ஸ், ஆப்பிள் 14 ஐஃபோன் ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு புதிய மாடல்கள் வெளிவர இருக்கின்றன. இவை மட்டுமில்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச்கிகள், ஏர் பாட்ஸ் மற்றும் பல்வேறு அக்சஸரீக்களும் வெளிவர இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது.

Also Read : ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.! 

ஏற்கனவே சிப்செட்களில் பிரச்சனை இருப்பதாக பலமுறை கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐஃபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் என்ற இரண்டு மாடல்களிலுமே AB15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு சிப்புகளும் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 6 வயது குழந்தையின் ஆதார் எண்ணை அமேசானில் வெளியிட்ட வியாபாரி.!

ஆப்பிள் ஒவ்வொரு முறை தனது ஐஃபோன் சீரிசை அப்டேட் செய்து புதிய ஜெனரேஷன் மாடலாக வெளியிடும் போது பழைய சிப்செட்டை பயன்படுத்தாது. எனவே இந்த செய்தி உண்மையானது தானா அல்லது இரண்டு மாடல்களுக்கு மட்டும் ஐஃபோன் 13 சிப்செட் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பது ஃபோன் வெளியீடு அன்று தெரிந்துவிடும்.

எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வு முன்கூட்டியே நடக்க இருப்பது, ஆப்பிள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, IPhone, Technology

அடுத்த செய்தி