Home /News /technology /

வெகு விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள iPhone 13.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா.?

வெகு விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள iPhone 13.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா.?

அமேசான், ஐபோன் 13 மினி

அமேசான், ஐபோன் 13 மினி

Apple iPhone 13 | ஐபோன் 13 இந்தியாவில் தயாரிக்கப்படப் போகிறது / அசெம்பிள் செய்யப்படப்போகிறது என்பதால் எப்போது வேண்டுமானாலும் iPhone 13 விலை குறையும் என்று அர்த்தமல்ல.

ஐபோன் 13 ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ‘மேட் இன் இந்தியா’ ஸ்மார்ட் ஃபோனாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த ஐபோன் 13-ஐ இந்திய சந்தையில் விற்பது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்ய போவதாக கூறப்படுகிறது.

இது குறித்த விவரங்கள் இந்த வாரம் Business Standard report-ஆல் பகிரப்பட்டன. இதனிடையே ஆப்பிள் ஐபோன் 13 சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படும். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதன் ஐபோன் 12, ஐபோன் 11 மற்றும் அவுட்கோயிங் ஐபோன் எஸ்இ ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. இப்போது இந்த பட்டியலில் ஐபோன் 13 புதிதாக சேர்ந்துள்ளது.

ஐபோன் 13 உற்பத்தி ஏப்ரல் முதல் இந்தியாவில் தொடங்கும் என்றும் அறிக்கை கூறுகிறது. ஆனால் ஐபோன் 13 இந்தியாவில் தயாரிக்கப்படப் போகிறது / அசெம்பிள் செய்யப்படப்போகிறது என்பதால் எப்போது வேண்டுமானாலும் iPhone 13 விலை குறையும் என்று அர்த்தமல்ல. ஆப்பிளின் உலகளாவிய விலை நிர்ணய உத்தி இந்திய விலைகளை அதே நிலையில் வைத்திருக்க கூடும். ஏனென்றால், ஆப்பிள் முன்பு இந்தியாவில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12-ஐ தயாரிக்கத் தொடங்கிய போது பலரும் அந்த போன்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் விலை குறையவில்லை. எனினும் ஒவ்வொரு ஆண்டும் ட்ரெண்டை கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வ விலை வீழ்ச்சியைக் காண வாய்ப்புகள் உள்ளன.



ஐபோன் 13 முன்பே சோதனை தயாரிப்பில் (trial production) வைக்கப்பட்டது. மேலும் ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இடையே பிரச்சனைகள் மற்றும் பதற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால், ஏற்கனவே இந்த ஐபோன் 13 முழு உற்பத்தியில் இருந்திருக்கும். சமீபத்திய Business Standard-ன் அறிக்கைபடி ஆப்பிள் ஐபோன் 13-ன் உள்ளூர் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. ஆப்பிள் ஐபோனின் இந்திய உற்பத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் 6 சீரிஸுடன் தொடங்கியது. அதன் பின்னர் கூட ஐபோன் மாடல்களுக்கு ஆப்பிள் எந்த விலை திருத்தத்தையும் செய்ததை பார்க்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் பட்டியலில் புதிய iPhone 11 மற்றும் iPhone 12 ஆகியவை இருப்பதை முன்னரே பார்த்தோம். இதனிடையே ஃபாக்ஸ்கான் தவிர, ஆப்பிள் அதன் இந்திய உற்பத்தி செட்டப்பிற்காக விஸ்ட்ரான், ஃபாக்ஸ்லிங்க், ஃப்ளெக்ஸ் லிமிடெட் மற்றும் இந்தியாவில் உள்ள வேறு சில சப்ளையர்களையும் நம்பி இருக்கிறது.

Also Read : ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு கூகுளின் பிரத்யேக அம்சங்கள்!

ஆப்பிள் கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபோன் 13-ஐ அறிமுகப்படுத்தியது, இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும். ஐபோன் 13 மினியின் அடிப்படை மாடல் இந்தியாவில் ரூ.69,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ.79,900 ஆகும். விரைவில் ஐபோன் 13 மேட் இன் இந்தியா தயாரிப்பாக மாறினாலும் கூட ஆப்பிள் இந்தியாவில் அதன் விலை நிர்ணய உத்தியை பராமரிக்க விரும்புவதால் ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13-ன் ஆரம்ப விலை மேலே பார்த்தது போலவே முறையே ரூ.69,990 மற்றும் ரூ.79,990 என்ற அளவில் தான் இருக்கும். ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது ப்ரோ வேரியன்ட்ஸ் உலகளாவிய சந்தைகளில் தொடர்ந்து தயாரிக்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு மேலானாலும் ஐபோன் 13 இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சிறந்த ஹை-என்ட் ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, IPhone, Technology

அடுத்த செய்தி