• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஐபோன் 13 ப்ரோ vs கூகுள் பிக்சல் 6 ப்ரோ... இரண்டில் எது சிறந்த கேமரா ஃபோன்!

ஐபோன் 13 ப்ரோ vs கூகுள் பிக்சல் 6 ப்ரோ... இரண்டில் எது சிறந்த கேமரா ஃபோன்!

ஐபோன் 13 ப்ரோ vs கூகுள் பிக்சல் 6 ப்ரோ

ஐபோன் 13 ப்ரோ vs கூகுள் பிக்சல் 6 ப்ரோ

iPhone 13 Pro ஃபோனின் ஃபோட்டோ ஸ்கோர் 144, ஜூம் ஜூம் 76, வீடியோ ஸ்கோர் 119 ஆகும்.

  • Share this:
கூகுள் பிக்சல் போன்களின் கேமராக்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், சமீபத்திய தரவரிசை பட்டியலில் கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஃபோனின் கேமராக்களை, ஐபோன் 13 ப்ரோ ஃபோன் கேமராக்கள் முறியடித்து பட்டியலில் முன்னிலை வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. எப்போதும் போலவே DXOMARK-ன் சிறந்த கேமரா ஃபோன்களின் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் கூகுளின் தயாரிப்பான Pixel 6 Pro ஃபோன் இடம் பெற்றிருந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் iPhone 13 Pro ஃபோனில் இடம்பெற்றுள்ள கேமராக்கள், Pixel 6 Pro கேமராக்களை விட சிறந்தவை என்று DxOMark விமர்சகர்களால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 போன்களின் கேமராக்களையும் கேமராக்களை அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு DxOMark விமர்சகர்கள் Pixel 6 Pro-வை விட iPhone 13 Pro கேமராக்கள் சிறந்தவை என்று கூறி இருக்கிறார்கள். Pixel 6 Pro-வில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய கேமரா ஹார்டுவேர் காரணமாக, கூகுள் தரவரிசையில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது மிகவும் ஆச்சரியம் தரும் விஷயமாக இருக்கிறது.

DxOmark-ன் தரவரிசை பட்டியலில் Google Pixel 6 Pro ஃபோனின் ஸ்கோர் 135, iPhone 13 Pro-ன் ஸ்கோர் 137 ஆகும். Google Pixel 6 Pro ஃபோனானது 135 புள்ளிகளை பெற்று iPhone 13 Pro Max, iPhone 13 Pro மற்றும் Huawei Mate 40 Pro ஆகிய ஃபோன்களுக்கு கீழே ஆறாவது இடத்தில் உள்ளது. Google Pixel 6 Pro ஃபோட்டோ டிபார்ட்மென்டில் 143, ஜூம் செக்மென்ட்டில் 71 மற்றும் வீடியோ செக்மென்ட்டில்115 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஆனால் iPhone 13 Pro ஃபோனின் ஃபோட்டோ ஸ்கோர் 144, ஜூம் ஜூம் 76, வீடியோ ஸ்கோர் 119 ஆகும். எனினும் Google Pixel 6 Pro கேமராக்கள் பிரகாசமான ஒளியில் நல்ல போட்டோக்களை அவுட்புட்டாக தருவதாகவும், இன்டோர் இமேஜஸ் மற்றும் வீடியோக்களில் நல்ல ஷேடோ டீட்டெயில் மற்றும் கான்ட்ராஸ்டை தருவதாகவும் DXOMARK பாராட்டி இருக்கிறது. iPhone 13 Pro செல்ஃபி கேமராவை விட Google Pixel 6 Pro சிறந்த ஸ்கோர்களை பெறுகிறது. DxOMark தரவரிசையில் 144 புள்ளிகளுடன் Huawei P50 Pro முதலிடத்தில் இருக்கிறது. 143 புள்ளிகளுடன் Xiaomi Mi 11 Ultra இரண்டாம் இடத்தில இருக்கிறது.

Also read... வாட்ஸ்அப் வெப் அப்டேட் - 3 முக்கிய அம்சங்கள் அறிமுகம்!

குறைபாடு எதில்?

குரூப் ஃபோட்டோ என்று வரும் போது Google Pixel 6 Pro-வை iPhone 13 Pro முறியடிக்கிறது. ஏனென்றால் குரூப் ஃபோட்டோக்களில் Pixel 6 Pro-வின் கேமராவானது ஒரு narrow depth-ஐ கொண்டிருந்தது. இதன் விளைவாக குரூப் ஃபோட்டோக்களின் பேக்ரவுண்ட் மங்கலாக மாறும் குறைபாடு காணப்படுகிறது. தவிர இன்டோர் மற்றும் லோ லைட் இமேஜேசின் நாய்ஸ், ஈர்க்க முடியாத அல்ட்ரா வைட் கேமரா மற்றும் வீடியோவில் கலர் இன்ஸ்டெபிளிட்டி ஆகியவற்றிலும் சிக்கல் காணப்படுகிறது. தற்போதைய சூழலில் இரண்டில் Pixel 6 Pro இந்தியாவிற்கு இன்னும் வராத நிலையில், iPhone 13 Pro சிறந்த கேமரா ஃபோனாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: