iPhone: செப்டம்பரில் வெளியாகிறதா ஐபோன் 13 சீரிஸ் - விற்பனைக்கு வரும் தேதி குறித்து பரவும் தகவல்!

ஐபோன் 13

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய 2021 ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய 2021 ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஐபோன் 13 அறிமுகம் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. மாதம் மட்டுமின்றி ஐபோன் 13 அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி பற்றியும் தகவல்கள் வெளியாகி ஐபோன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவை இதில் அடங்கும். மேற்காணும் 4 ஐபோன் மாடல்கள் பற்றிய விவரங்கள் கடந்த சில மாதங்களில் பல முறை லீக் ஆகியுள்ளன. ஆனால் தற்போது ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை பற்றிய சில தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு புதிய அறிக்கையின் படி, ஆப்பிள் 2021 ஐபோன் சீரிஸ் வரும் செப்டம்பர் 14-ல் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஐபோன் 13 சீரிஸ் தொடர்பாக தற்போது வெளியாகி உள்ள ஸ்பெசிஃபிகேஷன் மற்றும் பிற விவரங்களை பற்றிய கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் வெளியான Phone Arena அறிக்கையில் வெட்பஷ் அனலைஸ்ட் (Wedbush analyst) டான் இவ்ஸை மேற்கோள் காட்டி, ஐபோன் 13 சீரிஸ் வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வெட் புஷ் அனலைஸ்ட் டான் இவ்ஸின் கணிப்புகளின் அடிப்படையிலேயே Phone Arena ஐபோன் 13 சீரிஸ் அறிமுகமாகும் தேதிகளை ஊகித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் சென்டிமெண்டாக தனது ஒவ்வொரு புதிய தயாரிப்புகளையும் செவ்வாய் கிழமையன்றே வெளியிடுவதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர்.

அதன்படி செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் செவ்வாய் கிழமையானது 14-ம் தேதி வருகிறது. எனவே அநேகமாக செப்டம்பர் 14-ம் தேதி ஐபோன் 13 சீரிஸ் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. ஆய்வாளர் தனது விநியோக சங்கிலி ஆதாரங்களை (supply chain sources) மேற்கோள் காட்டி, செப்டம்பர் 17 முதல் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் ப்ரீ ஆர்டர்களை எடுக்க துவங்கும். அதனை தொடர்ந்து செப்டம்பர் 24 முதல் புதிய ஆப்பிள் ஐபோன் சீரிஸ்களை மக்கள் தங்கள் கைகளில் பெற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... 11th Gen Intel Core: 11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப் ஏன் அவசியம்? 5 காரணங்கள்!

மேலே குறிப்பிடப்பட்ட தேதிகள் புதிய ஐபோன் சீரிஸை அறிமுகப்படுத்தும் போது ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக பின்பற்றும் செவ்வாய் (செப்டம்பர் 14) -வெள்ளி(செப்டம்பர் 17) -வெள்ளி (செப்டம்பர் 24 ) வெளியீட்டு ஷெட்யூலுடன் சரியாக பொருந்துகின்றன. அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய 4 மாடல் ஐபோன்களில், ஐபோன் 13 மாடல் மிகவும் வெற்றிகரமான ஹிட் மாடலாக அமையக்கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: