இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் சீரிஸ் ஆன ஐபோன் 13 மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில், ஐபோன் 12 உட்பட பல ஆப்பிள் ஐபோன் மாடல்களும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன. அதிலொரு சலுகையாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது ரூ 12,000 என்கிற பிளாட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் 12 மாடலின் விலை ரூ 53,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரூ.12,000 என்கிற அமேசான் தள்ளுபடி ஆனது ஐபோன் 12 மாடலின் ப்ளூ மற்றும் ரெட் வண்ணங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். உடனே கவலை கொள்ள வேண்டாம்; இதர வண்ணங்களுக்கும் தள்ளுபடி உண்டு, ஆனால் சற்று குறைவாகவே உள்ளது. பர்பிள் மற்றும் ஒயிட் கலர் ஐபோன் 12 (64ஜிபி) மாடல்கள் மீது முறையே ரூ.5,000 மற்றும் ரூ.10,000 பிளாட் தள்ளுபடி அணுக கிடைக்கிறது. இந்த இடத்தில், ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரின் படி, ஐபோன் 12 மாடல் ஆனது அதிகாரப்பூர்வமாக ரூ.65,900க்கு வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐபோன் 12 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.11,000 வரை என்கிற அமேசான் தள்ளுபடியை பெறுகிறது, அதாவது இதன் விலை ரூ.59,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 மாடலின் அசல் விலை ரூ.70,900 ஆகும்.
Flat தள்ளுபடிகளை தவிர்த்து ஐபோன் 12 மடலுக்கு ரூ.11,650 என்கிற எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடியும் அணுக கிடைக்கும். குறிப்பிடத்தக்க வகையில், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பொறுத்தவரை ஐபோன் 12-க்காக நீங்கள் பரிமாற்ற விரும்பும் உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மதிப்பு முற்றிலும் அதன் நிலையைப் பொறுத்தது. உதாரணமாக, ஐபோன் 11 மாடலை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு அதிகபட்ச எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும்.
Also Read : குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..
ஆகமொத்தம் ஒரு ஐபோன் 12 மாடலை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால், இதுவொரு சரியான நேரம் ஆகும். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஐபோன் 12 மாடலனது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே சலுகைகள் அணுக கிடைக்கிறது. 256 ஜிபி வேரியண்ட் மீது அல்ல.
Also Read : ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்... உங்கள் பணம் காணாமல் போகலாம்.. பகீர் எச்சரிக்கை...
அமேசான் தளத்தை போலவே, மற்றொரு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்டும் ஐபோன் 12 மீது ரூ.10,910 வரை தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், இந்த தள்ளுபடி (ப்ராடெக்ட்) ரெட் கலரின் கீழான 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். உடன் ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் வேல்யூ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 10% தள்ளுபடியும் அணுக கிடைக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.