Home /News /technology /

ஆப்பிளின் iphone 14 சீரிஸ் அறிமுகத்திற்கு பின் விலை குறைக்கப்பட்ட iPhone 12 மற்றும் iPhone 13!

ஆப்பிளின் iphone 14 சீரிஸ் அறிமுகத்திற்கு பின் விலை குறைக்கப்பட்ட iPhone 12 மற்றும் iPhone 13!

ஆப்பில் ஐபோன்

ஆப்பில் ஐபோன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இந்த மொபைல் இன்னும் அதிக தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஆப்பிள் நிறுவனம் தனது iPhone 14 சீரிஸை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் iPhone 14, iPhone 14 பிளஸ், iPhone 14 ப்ரோ மற்றும் iPhone 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஐபோன்கள் ப்ரீ-ஆர்டருக்கு தயாராக உள்ளன. புதிய iPhone 14 சீரிஸின் அறிமுகப்படுத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட iPhone 13 சீரிஸ் மொபைல்கள் மற்றும் iPhone 12 சீரிஸ் மொபைல்கஆளின் விலைகளை கணிசமாக குறைத்துள்ளது. அதே போல iPhone 14 சீரிஸ் அறிமுகத்திற்கு பின் ஆப்பிள் iPhone 12 mini மற்றும் iPhone 12 mini மாடல்களை நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு iPhone 13 ரூ.79,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், iPhone 14 தற்போது இதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஆப்பிள் iPhone 12 மற்றும் iPhone 13 ஆகிய மொபைல்கள்அவற்றின் அறிமுக விலையில் இருந்து ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகமான iPhone 13-ன் பேஸ் வேரியன்ட்டான 128GB ஸ்டோரேஜ் மொபைல் விலை இந்தியாவில் இப்போது ரூ.69,900 ஆகும். ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் டிரேட்-இன் ஆப்ஷனை பயன்படுத்தி யூஸர்கள் விலையை மேலும் குறைக்கலாம். தவிர பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் விரைவில் வரவிற்கும் பண்டிகை கால சலுகையின் போது இன்னும் கூட மலிவான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

     

    Read more: சீன ஆப்-களால் வந்த சிக்கல்..... போலி கடன் செயலிகளை ஒழிக்க தயாராகிறது ‘ஒயிட் லிஸ்ட்’!

    பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டும் முறையே பிக் பில்லியன் டேஸ் மற்றும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை தங்கள் பிளாட்ஃபார்ம்களில் அறிவித்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வரவிருக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது iPhone 13 பெரும் தள்ளுபடியை பெற கூடும். மறுபுறம் விலை குறைப்பிற்கு பிறகு iPhone 12-ன் விலை இப்போது ரூ.59,990-ஆக உள்ளது. இந்த மொபைலின் அறிமுக விலை ரூ.79,900-ஆக இருந்த நிலையில், ஆரம்ப விலையை விட கிட்டத்தட்ட ரூ.20,000 தள்ளுபடி விலையில் தற்போது கிடைக்கிறது. சுவாரஸ்யமாக iPhone 12-ன் பேஸ் வேரியன்ட் Amazon-ல் ரூ.52,999-

    பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இந்த மொபைல் இன்னும் அதிக தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mini மாடல்களை நிறுத்தி உள்ள நிலையில் iPhone 14 சீரிஸ் Mini-க்கு பதிலாக பெரிய ஸ்கிரீனுடன் வரும் iPhone 14 Plus-ஐ கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்திய iPhone 14 சீரிஸில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றம் சிப்செட். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 14 மற்றும் iPhone 14 Plus கடந்த ஆண்டின் A15 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படும் அதே நேரம், iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை லேட்டஸ்ட் Apple A16 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளன.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Apple iphone, IPhone

    அடுத்த செய்தி