Home /News /technology /

ஃபிளிப்கார்ட் அதிரடி விற்பனை: iPhone 12 போனிற்கு ஆச்சரியமூட்டும் சலுகைகள்

ஃபிளிப்கார்ட் அதிரடி விற்பனை: iPhone 12 போனிற்கு ஆச்சரியமூட்டும் சலுகைகள்

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 12 மீதான இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியான தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 12 மீதான இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியான தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 12 மீதான இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியான தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ளது.

தீபாவளி தொடங்கி புத்தாண்டு வரை, பல்வேறு ஈகாமர்ஸ் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கும். கிட்டத்தட்ட அனைத்து பொருட்களின் மீதும் தள்ளுபடிகள் வழங்கினாலும், ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்ஸ், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் மீது எக்கச்சக்கமான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஃபிளிப்கார்ட் Big Bachat Dhamaal சேல் அறிவித்துள்ளது. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 12 மீதான இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியான தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ளது.

விற்பனையில் இந்தியாவில் டிசம்பர் 6 வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய தள்ளுபடி விற்பனையில், iPhone 12 64GB வேரியன்ட் இப்போது ரூ. 55,999 க்கு கிடைக்கிறது. இந்த சலுகையில் கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கு குறைவாக iPhone 12 ஐ நீங்கள் வாங்கலாம். இதற்கு முன்பாக, இதே வேரியன்ட் ரூ. 65,900 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல, iPhone 12 128GB வேரியன்ட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் குறைவாக, தற்போது ரூ. 61,999 க்குக் கிடைக்கிறது. இந்த விற்பனை அறிவிப்பதற்கு முன்பு, இந்த் வேரியன்ட் ரூ. 70,900 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு iPhone 12 வேரியன்ட்களுமே, தற்போது சிவப்பு மற்றும் நீலம் என்று இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன. கருப்பு iPhone 12 மாடல் தற்போது இந்த தள்ளுபடி விற்பனையில் இல்லை. அதே போல, 256GB வேரியன்ட்டும் இந்த தளத்தில் விற்பனைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ஃபிளிப்கார்ட் Big Bachat Dhamaal விற்பனையில் iPhone 12 குறைந்த விலையில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில சலுகைகள் iPhone 12 இன் விலையை இன்னும் குறைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை வழங்கிய நீங்கள் அமெக்ஸ் நெட்வொர்க் கார்டு வைத்திருந்தால், iPhone 12 மீது கூடுதலாக 20 சதவகிதம் தள்ளுபடி பெறலாம். இதனால், நீங்கள் கூடுதலாக பத்தாயிரம் ருபாய் வரை தள்ளுபடியைப் பெறுவீர்கள். ஆனால், இந்த சலுகை நீங்கள் முதல் முறையாக அமெக்ஸ் நெட்வொர்க் கார்டு பயன்படுத்தோம் போது மட்டும் தான் கிடைக்கும்.

உங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஜ் செய்து புதிய iPhone 12ஐ வாங்க விரும்பினால், உங்கள் போனின் மாடலுக்கு ஏற்ப, ரூ. 16,050 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையைப் பெறலாம். மேலும் கனரா வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் யூசர்களுக்கு விலையில் 10 சதவிகதம் உடனடி டிஸ்கவுன்ட் கிடைக்கும். அல்லது, யூசர்கள், EMI விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.

ALSO READ |  ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

விற்பனை விலையில் மட்டும் தள்ளுபடி வழங்காமல், கூடுதலாக ரிப்பேர் கவரேஜ் மற்றும் சேவைகளிலும் கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. ‘ஆப்பிள் கேர் சர்வீசஸ் வழங்கும் Servify Protect என்ற சேவைகளின் தொகுப்பில், ஓராண்டு வரை ஆக்சிடண்டல் மற்றும் லிக்விட் டேமேஜ் ஆகியவற்றுக்கு கவரேஜ் வழங்குகிறது. மேலும், உங்கள் ஐபோனின் உதிரி பாகங்கள் மற்றும் பேட்டரி சர்வீஸ் செய்வதும் இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் சேவைகளை ரூ. 7,079/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Flipkart, IPhone

அடுத்த செய்தி