புதிய ஐபோன் 12 சீரிஸ் போன்களுடன் பவர் அடாப்டர் வராது : ஆப்பிள் நிறுவனம் விளக்கம்

புதிய ஐபோன் 12 சீரிஸ்

புதிய ஐபோன் 12 சீரிஸ் போன்களுடன் பவர் அடாப்டர், இயர்பட்ஸ், வயர்டு இயர்போன்கள் ஏன் வரவில்லை என்பதற்கான விளக்கத்தை ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது.

 • Share this:
  ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹை ஸ்பீடு நிகழ்வில் 5ஜி வசதியுடன் ஐபோன் 12 சீரிஸ் புதிய மாடல்களை நேற்று அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 12 சீரிஸ் போன்களுடன் பவர் அடாப்டர் வராது என ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.

  காரணம் என்னவென்றால், ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட பவர் அடாப்டரை நீங்கள் வைத்திருக்கலாம். அதனுடன் இந்த புதிதான பவர் அடாப்டரும் சேரும். அதேபோல, இயர்போன், வயர்டு இயர்போன்களுக்கும் இது பொருந்தும். ஏனெனில் பேக்கிங்கில் இவைகளும் அகற்றப்பட்டுள்ளன.  ஐபோன் 12 பெட்டிகளில் பவர் அடாப்டர் இருக்காது என்றாலும் யூ.எஸ்.பி-சி மின்னல் கேபிள்கள் இருக்கும் என்பது உறுதி. இந்த மாற்றத்தை செய்வதின் மூலம் ஐபோன் 12 சீரிஸ் போன்களுக்கான பெட்டிகளை கணிசமான அளவில் சிறியதாக இருக்க அனுமதிக்கிறது என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

  ALSO READ |  5ஜி வசதியுடன் அசத்தல் லுக்கில் அறிமுகமானது ஐஃபோன் 12 சீரிஸ்.. சிறப்பம்சங்கள், விலை தெரியுமா?

  அதாவது முந்தைய ஆண்டின் ஐபோன் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது 70% கூடுதல் பெட்டிகளை ஒரே இடத்தில் வைத்து அனுப்ப முடியும். இந்த மாற்றங்கள் ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.

  இது ஆண்டுக்கு 4,50,000 கார்களை சாலையில் இருந்து அகற்றுவதற்கு சமம். கட்டுக்கடங்காமல் பெருகிவரும் மின்குப்பையைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.  மற்றொரு புறம், புதிய ஸ்மார்ட்போன் பெட்டிகளிலிருந்து சார்ஜர்களை அகற்றுவதற்கான சில காரணங்கள் உள்ளன. தொலைபேசி தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பிடத்தக்க வகையில் செலவுகளைக் இது குறைக்க உதவும், ஏனெனில் அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு தொலைபேசியிலும் ஒரு சார்ஜருக்கான வளங்களைச் சேமிப்பார்கள்.  பிரபலமான பிராண்டுகள் வெளியிடும் ஸ்மார்ட் போன்கள், வெளிவந்த சில மாதங்களிலேயே மில்லியன்கணக்கில் விற்பனையாகும். அந்த வகையில் சார்ஜர் இல்லை என்றால், மொபைல் பேக்கேஜிங் சிறியதாகவும், சுருக்கமாகவும் மாற உதவுகிறது.

  ALSO READ |  அக்டோபர் 16 முதல் தொடங்கும் 'பிளிப்கார்ட்' பிக் பில்லியன் விற்பனை.. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைப் பட்டியல்..

  மேலும் ஒரே நேரத்தில் அதிகமானவற்றை அனுப்ப முடியும். இது நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு சிறந்த செய்தியாக பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பேக்கிங் பொருட்களின் தேவை குறைவாக இருக்கும் பட்சத்தில், அதனால் கழிவுகளும் குறையும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது ஷிப்பிங் செலவுகளையும் சேமிக்கிறது. சிறிய தொகுப்புகள் என்றால் ஒரே பெட்டியில் அதிக மொபைல் பேக்கிங்கை குறிப்பிட்ட விலையில் அனுப்ப முடியும் என்பதுதான்.  ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.சி கூற்றுப்படி, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2019 ஆம் ஆண்டின் Q4 இல் 368.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஷிப்பிங் செய்துள்ளன.

  அப்படியானால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சார்ஜர்கள் அதனுடன் அனுப்பப்பட்டன. பொதுவாக குறிப்பிட்ட ப்ராண்டில் ஏற்கனவே வாங்கிய ஸ்மார்ட்போன்களின் சார்ஜரை மக்கள் உபயோகித்து வருகின்றனர். அதன்படி, புதிய தொலைபேசியுடன் வந்த சார்ஜர் தொடர்ந்து பெட்டியில் உபயோகப்படுத்தாமல் கிடக்கும். எனவே சார்ஜர் தேவைப்பட்டால் புதிதாக மக்கள் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: