Home /News /technology /

அமேசானின் அதிரடி ஆஃபர்: வெறும் ரூ.38,999-க்கு ஐபோன் 12 - வாங்குவது எப்படி?

அமேசானின் அதிரடி ஆஃபர்: வெறும் ரூ.38,999-க்கு ஐபோன் 12 - வாங்குவது எப்படி?

ஐபோன் 12

ஐபோன் 12

வழக்கம் போல, ஆப்பிள் நிறுவனமானது ஐபோன் 12 மீதான எந்தவிதமான பெரிய தள்ளுபடியையும் அல்லது விலைக் குறைப்பையும் வழங்கவில்லை.

ஆப்பிள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான அதன் லேட்டஸ்ட் மாடல்களாக ஐபோன் 13 சீரிஸை அறிமுகம் செய்து இருந்தாலும் கூட முந்தைய மாடல்களில் ஒன்றான ஐபோன் 12 மீதான மவுசு கொஞ்சமும் குறைந்ததாய் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஐபோன் 12 மாடலுக்கும், ஐபோன் 13 மாடலுக்கும் இடையே ஒரு சில சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன.

இதற்கிடையில் தான் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்துயா, ஐபோன் 12 மாடல் மீது ஒரு நம்பமுடியாத சலுகையை அறிவித்து உள்ளது. ஒருவேளை உங்களுக்கு ஒரு தரமான ஐபோன் மாடலை வாங்க வேண்டும் அதே சமயம் அது உங்கள் பட்ஜெட்டை மீறிவிடக்கூடாது என்றால் அமேசானின் இந்த ஐபோன் 12 ஆஃபரை நீங்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கம் போல, ஆப்பிள் நிறுவனமானது ஐபோன் 12 மீதான எந்தவிதமான பெரிய தள்ளுபடியையும் அல்லது விலைக் குறைப்பையும் வழங்கவில்லை. ஆகையால் நீங்கள் மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தே சலுகைகளை தேட வேண்டும். அப்படியான ஒரு சலுகையை தான் அமேசான் வழங்குகிறது. இந்த இடத்தில் உங்களிடம் பழைய ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் இருந்தால் நல்லது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஐபோன் 12 மாடலை ரூ.38,999 க்கு வாங்குவது எப்படி?

அமேசான் இந்தியாவில் உள்ள அனைத்து ரீடெய்லர்களுமே ஐபோன் 12 மீதான தள்ளுபடிகளை வழங்குகின்றன. இதன் கீழ் பிளாக் கலர் ஐபோன் 12 மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை நீங்கள் ரூ.51,999 க்கு வாங்கலாம். அட்டகாசமான ஐபோன் அனுபவத்தைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத ஒப்பந்தமாகும். இருப்பினும், அமேசான் தளமானது குறிப்பிட்ட ஐபோன் மாடலின் மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது.

இது ஐபோன் 12 மாடலின் இறுதி விலையில் இருந்து கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்ய உங்களுக்கு உதவும். அமேசான் தளத்தின் கூற்றுப்படி, ஐபோன் 12 மீது ரூ.14,900 என்கிற எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 12 மாடலின் விலையானது ஐபோன் 11-ஐப் போலவே மலிவானதாக மாறும். இருப்பினும், இந்த விலையை அடைவது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

ஏனெனில் குறிப்பிட்ட எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை பெறக்கூடிய ஒரு காம்போ - ஐபோன் எக்ஸ்ஆர் தான். அதாவது எக்ஸ்சேன்ஜ் செய்ய உங்களிடம் ஐபோன் எக்ஸ்ஆர் இருந்தால், அது நன்றாகப் வேலை செய்தால் உங்களுக்கு ரூ.13,000 என்கிற சலுகை கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 12 மாடலை ரூ.51,999 என்கிற விலைக்கு மாறாக ரூ.38,999 க்கு வாங்க முடியும். இந்த சலுகை விலை 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

Also read... Windows 11 அப்டேட்: இதையெல்லாம் செய்தால் மட்டுமே விண்டோஸ் 11 வெர்ஷனை பயன்படுத்த முடியும்

ஒருவேளை நீங்கள் ஐபோன் 11 அல்லது ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் - மன்னிக்கவும் - அவைகளுக்கு மிகவும் குறைவான எக்ஸ்சேன்ஜ் மதிப்பே அணுக கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன் எஸ்இ மாடல் ஆனது ரூ.5000 என்கிற மிகவும் மோசமான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை வழங்க, மறுகையில் உள்ள ஐபோன் 11 ஆனது ரூ.11,400 என்கிற எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை மட்டுமே வழங்குகிறது. இந்த இரண்டுமே உங்கள் பழைய ஐபோனுக்கான சிறந்த எக்ஸ்சேன்ஜ் மதிப்புகள் அல்ல என்பதால் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்புவதும், செய்யமால் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: IPhone

அடுத்த செய்தி