பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 சீரிஸ் ஃபோன்களுக்கு மாபெரும் தள்ளுபடி... விலைப்பட்டியல் இங்கே!

ஐபோன் 12

ஐபோன் 12 சீரிஸின் அனைத்து மாடல்களுக்கும் கிட்டத்தட்ட ரூ.13,000 வரை மெகா தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.

  • Share this:
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 13-ஐ செப்டம்பர் 14-ம் தேதியான நாளை ரிலீஸ் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஐபோன் 12 சீரிஸ் ஃபோனுக்கு மாபெரும் தள்ளுபடி போய் கொண்டிருப்பது ஐபோன் பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மற்றும் பிற தனது புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ள நிலையில், ஆப்பிளின் முந்தைய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பான ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு, பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 12 சீரிஸின் அனைத்து மாடல்களுக்கும் கிட்டத்தட்ட ரூ.13,000 வரை மெகா தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.இதன் படி ஸ்மார்ட்போனின் ஐபோன் 12 சீரிஸின் 128 ஜிபி மாடலுக்கு தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.12,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் ரூ.84,900-க்கு விற்கப்பட்டு வந்த ஐபோன் 12 சீரிஸ் 128 ஜிபி மாடல் தற்போது ரூ.71,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 ஸ்மார்ட் போஃன் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் யூஸர்கள் ரூ.15,000 வரை மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், பிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை பயன்படுத்தி மேலும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செலெக்டட் கார்டுகளுக்கு no-cost EMI கட்டண ஆப்ஷனுடன் இந்த ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன் கிடைக்கிறது. இது ஒரு தற்காலிக விலை குறைப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் விலை மீண்டும் ஏற்றப்படலாம். ஐபோன் 12 சீரிஸின் 64 ஜிபி மாடல் ஸ்மார்ட் ஃபோன் ரூ.79,900-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.66,999-க்கு விற்கப்படுகிறது. அதே போல இந்த ஸ்மார்ட் ஃபோனின் 256 ஜிபி ஆப்ஷன் ரூ.94,900-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிளிப்கார்ட்டில் இது ரூ.81,999-க்கு விற்கப்படுகிறது.

* ஐபோன் 12 - 64 ஜிபி 16% தள்ளுபடியுடன் ரூ.66,999

* ஐபோன் 12 128 ஜிபி 15% தள்ளுபடியுடன் ரூ.71,999

* ஐபோன் 12 256 ஜிபி 13% தள்ளுபடியுடன் ரூ. 81,999

Also read... ஐபோன் 13 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இன்று அறிமுகம் - 'கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்' ஈவன்ட்டை லைவில் பார்ப்பது எப்படி?

இதே போல ஐபோன் 12 மினி ஸ்மார்ட் போன்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 12 மினியின் 64 ஜிபி,128 ஜிபி, 256 ஜிபி மாடல்களுக்கு ரூ.9,901 விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி பின்வரும் விலையில் விற்கப்பட்டு வருகிறது.

* ஐபோன் 12 மினி 64 ஜிபி 14% தள்ளுபடியுடன் ரூ.59,999

* ஐபோன் 12 மினி 128 ஜிபி 13% தள்ளுபடியுடன் ரூ.64,999

* ஐபோன் 12 மினி 256 ஜிபி 11% தள்ளுபடியுடன் ரூ.74,999
Published by:Vinothini Aandisamy
First published: