ஐபோன் 11 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு... விற்பனை எப்போது?

செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகமாகும் புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 20-ம் தேதியே விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

Web Desk | news18
Updated: August 16, 2019, 5:56 PM IST
ஐபோன் 11 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு... விற்பனை எப்போது?
ஐஃபோன்
Web Desk | news18
Updated: August 16, 2019, 5:56 PM IST
2019-ம் ஆண்டுக்கான ஐபோன் மாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஃபோன் 11 வருகிற செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. iOS 13 ஐஃபோனுக்கு புதுப்பொலிவான தோற்றத்தை அளிக்கிறது. பழைய ஐபோன்களுக்கு இந்த iOS 13 அப்டேட் வருகிற செப்டம்பர் மாதம் 23-ம் தேதி பயனாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபோன் வெளியீட்டில் ஐஃபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் இடம்பெறலாம். ஐபோன் XR-ன் தொடர்ச்சியாக ஐஃபோன் 11 வெளிவருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஐஃபோன் XS-ன் தொடர்ச்சியாக ஐஃபோன் 11 ப்ரோவும் ஐஃபோன் XS மேக்ஸ் அடிப்படையில் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் வெளியாகும் என்றும் தெரிகிறது.


செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகமாகும் புதிய ஐஃபோன் மாடல்கள் செப்டம்பர் 20-ம் தேதியே விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் பார்க்க: வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..!

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...