ஐபோன் பயனர்களுக்கு இனிப்பாக இருக்கிறதா ‘ஐ.ஓ.எஸ் 13’?

ஐபோன் 6 எஸ் மற்றும் அதன் பின் வெளியான டிவைஸ்களில் ஐ.ஒ.எஸ். 13 விரைவில் வழங்கப்படுகிறது.

news18
Updated: June 4, 2019, 12:48 PM IST
ஐபோன் பயனர்களுக்கு இனிப்பாக இருக்கிறதா ‘ஐ.ஓ.எஸ் 13’?
ஐபோன்
news18
Updated: June 4, 2019, 12:48 PM IST
சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஐபோன் மற்றும் ஐபேட் டிவைஸ்களுக்கான புதிய ஐ.ஓ.எஸ்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு நடந்தது. இதில், ஐபோன் மற்றும் ஐபேட் டிவைஸ்களுக்கான புதிய ஐ.ஓ.எஸ்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஐ.ஓ.எஸ் 13 இயங்கு தளத்தில், பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இரவிலும் பயன்படுத்தும் டார்க் மோட், அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் மேப்ஸ், அப்டேட் செய்யப்பட்ட போட்டோஸ் ஆஃப் ஆகியவை இருக்கின்றன. இதற்கான பீட்டா வெர்ஷன் இம்மாத இறுதியில் வழங்கப்படுகிறது.


புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும் ஐ.ஒ.எஸ். 13 இயங்கு தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெஸ்ட்யூர் மூலம் புகைப்படங்களை எளிமையாக எடிட் செய்யலாம். இத்துடன் வீடியோக்களை ரொட்டேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.ஆஃப்கள் மற்றும் சமூக வலைதளங்களில் லாக்-இன் செய்யும் வழிமுறையை பாதுகாப்பானதாக மாற்ற ஆப்பிள் ஐ.டி. சேவையை இருக்கிறது. இதனால், பயனர்கள் வெவ்வேறு ஆஃப்கள் மற்றும் வலைதளங்களில் எளிமையாக லாக்-இன் மற்றும் சைன்-இன் செய்ய முடியும்

ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தில் மேம்பட்ட ரிமைண்டர்ஸ், மெசேஜஸ் செயலியில் புதிய வசதிகள், சிரி ஷார்ட்கட்கள், மேம்பட்ட கார்பிளே, ஐ.ஒ.எஸ் டிவைஸ்களை குரல் மூலம் இயக்கும் வசதி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. நோட்ஸ், ஃபைல்ஸ், ஹெல்த் ஆப் உள்ளிட்டவற்றுக்கும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஐபோன் 6 எஸ் மற்றும் அதன் பின் வெளியான டிவைஸ்களில் ஐ.ஒ.எஸ். 13 விரைவில் வழங்கப்படுகிறது.
First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...