ஒன்றிணைந்த வோடபோன் ஐடியா- வீஐ எப்படி உச்சரிப்பது? நெட்டிசன்கள் கேள்வி

வோடபோன், ஐடியா தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அதன் புதிய பெயரான விஐ உச்சரிப்பது எப்படி? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ஒன்றிணைந்த வோடபோன் ஐடியா- வீஐ எப்படி உச்சரிப்பது? நெட்டிசன்கள் கேள்வி
வோடபோன் ஐடியா
  • Share this:
வீஐ என்ற பெயரில் பிரமாண்டமாக தொலைதொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக வோடபோன், ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு துல்லியமாக டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை கொடுப்பதில் வீஐ கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஐஎல் (வோடபோன் ஐடியா லிமிட்டெட்) என செயல்பட்டு வந்த நிலையில் புதிய பிராண்டாக அந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.

முன்பு வோடபோன் மற்றும் ஐடியா பிராண்டுகள் தனித்தனியாக இருந்தன. எனவே வோடபோன், ஐடியாவின்  பயனர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோடபோன் மற்றும் ஐடியா இணைந்த நேரத்தில் 408 மில்லியன் பயனர்களை பெற்றது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் 280 மில்லியன் பயனர்களாக குறைந்துள்ளது. எனவே தற்போது வோடபோன், ஐடியா நெட்வொர்க் ஒருங்கிணைப்பை நிறைவு செய்துள்ளதாகவும், இது உலகின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஒருங்கிணைப்பு மற்றும் ரெக்கார்ட் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஒருவர் "வீஐ" என்ற பயன்பாட்டின் பெயரை யார் கொண்டு வந்தார்கள்? ஆப் ஸ்டோரில் இரண்டு எழுத்து பயன்பாட்டைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்று கொஞ்சமாவது நினைத்தீர்களா? என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "ஏன் வோடபோன் ஐடியா "VI" என மறுபெயரிடப்பட வேண்டும். அவர்கள் "வீ" என்பதை ரோமன் எழுத்தில் கொண்டு வந்துள்ளனர். ஏனென்றால், உலகின் 6 வது சிறந்த நெட்வொர்க்காக உருவெடுக்க வேண்டும் என்பதால் தான்" என்று பதிவிட்டுள்ளார்.


புதிய பெயர் "வீஐ " குறித்து தெரிந்துகொள்ள பெரும்பாலானோர் ஆர்வமாக இருக்கின்றனர். இது எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்றும் "வீ"ல் உள்ள "நான்" என்றும் பல கோணத்தில் இந்த பிராண்டின் புதிய பெயரை ட்விட்டரில் பேசு பொருளாக்கி வருகின்றனர்.

இருப்பினும் வோடபோன் மற்றும் ஐடியா பல்வேறு அவதாரங்களில், பல தசாப்தங்களுக்கும் மேலாக இந்த துறையின் வளர்ச்சியை தனித்தனியாக வழிநடத்தி வந்துள்ளனர். மேலும், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டும் நெட்வொர்க் அனுபவம், கிராமப்புற இணைப்பு, வாடிக்கையாளர் சேவை, நிறுவன இயக்கம் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளன” என்று இந்த மறுபெயரிடுதலை "ஆதித்யா பிர்லா" குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்தார்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading