Home /News /technology /

இந்தியாவில் அதிகரிக்கும் இன்டர்நெட் முடக்கம்! சமாளிக்க உதவும் டிப்ஸ்கள் இங்கே

இந்தியாவில் அதிகரிக்கும் இன்டர்நெட் முடக்கம்! சமாளிக்க உதவும் டிப்ஸ்கள் இங்கே

இன்டர்நெட்

இன்டர்நெட்

திடீரென இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டால் எப்படி நீங்கள் தயாராக இருக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்.

    இன்றைய நவீன யுகத்தில் மிக பெரிய வரமாக உள்ளது இன்டர்நெட். இந்த இன்டர்நெட் யுகத்தில் இந்தியா ஒரு டிஜிட்டல் அதிகாரம் பெற்ற முழு சமூகமாக மாற முயற்சித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பல்வேறு சூழல்களில் சில பாதுகாப்பது காரணங்களை காட்டி அவ்வப்போது இன்டர்நெட்டை குறிப்பிட்ட பகுதிகளில் முடக்கி வருகின்றன.

    மொபைல் இன்டர்நெட்டை துண்டிப்பது எந்த ஒரு அசம்பாவிதமும் பரவாமல் தடுப்பதற்கான ஒரு வழி என பல நாடுகளின் அரசாங்கங்கள் வாதிடினாலும், எந்த சென்சிட்டிவான விஷயங்களுடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான குடிமக்களும் இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும் அவப்போது பல மாநிலங்களில் சில சூழல்களில் (தேர்தல்கள், தேர்வுகள், வன்முறை சம்பவங்கள்) மொபைல் இன்டர்நெட் முடக்கும் (Internet Shutdown) சம்பவங்கள் நிகழ்கின்றன. டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் அரசு நடவடிக்கை காரணமாக திடீரென ஆஃப்லைனுக்கு சென்றால் வாழ்க்கை கடினமாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஒருவேளை நீங்கள் வசிக்கும் பகுதியில் திடீரென இன்டர்நெட் முடக்கப்பட்டால் எப்படி நீங்கள் தயாராக இருக்கலாம் என்பதற்காக டிப்ஸ்கள் இங்கே..

    கையில் பணம்:

    இப்போது ஷாப்பிங் செய்ய பலரும் ரொக்கத்தை பயன்படுத்துவதை விட, மொபைல் பேமென்ட் ஆப்ஸ்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் நெருக்கடி காலங்களில் *99# சேவை உட்பட UPI பேமென்ட்ஸ்களை அரசாங்கம் நிறுத்தலாம். எனவே எந்த சூழலையும் எதிர் கொள்ள எப்போதும் கையிருப்பில் சில ஆயிரங்கள் ரொக்கமாக வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை இன்டர்நெட் முடக்கப்பட்டால் டிஜிட்டல் பேமென்ட்ஸ் செய்ய முடியாத சூழலில் ரொக்கத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.



    ஆவணங்கள், டிக்கெட்டுகளின் ஹாட் காப்பி:

    நீங்கள் பயணம் செய்ய வேண்டியதற்கான டிக்கெட்ஸ், உங்களது முக்கியமான டாக்குமென்ட்ஸ் உள்ளிட்டவற்றை போட்டோவாக உங்கள் ஸ்மார்ட் போனில் வைத்திருங்கள் அல்லது அனைத்து ஆவணங்களின் காப்பிகளையும் ஸ்கேன் செய்யுங்கள். பயணம் மேற்கொள்வதென்றால் உங்களிடம் புகைப்படங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஆவணங்கள், டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் போன்றவற்றின் பிரிண்ட்அவுட்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    also read : Paytmயின் புதிய கண்டுபிடிப்பான ஃபோட்டோ QRயில் முதலீடு செய்வதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.!

    ஆஃப் லைன் மேப்ஸை டவுன்லோட் செய்யவும்:

    உங்கள் மாநிலம் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியின் ஆஃப்லைன் மேப்ஸை, கூகுள் மேப்ஸிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 4G இன்டர்நெட் கிடைக்காத போது அல்லது இன்டர்நெட் முடக்கம் செய்யப்படும் போது ஆஃப்லைன் மேப்ஸ் உங்களுக்கு கை கொடுக்கும்.

    போனில் போதுமான பேலன்ஸ் வைத்திருங்கள்:



    அன்லிமிட்டட் கால்ஸ்களை வழங்கும் காம்போ பேக்ஸ்கள் இருந்தாலும் 4G கனெக்ஷன் துண்டிக்கப்பட்டால், நீங்கள் தொடர்பு கொள்ள 2G-ஐ நம்பியிருந்தால், கால்ஸ்கள் மற்றும் எஸ்எம்எஸ்-களுக்கு போதுமான பேலன்ஸை உங்கள் மொபைலில் வைத்திருப்பது முக்கியம்.

    பிராட்பேண்ட் கனெக்ஷன்ஸ்:

    பெரும்பாலான நேரங்களில் அரசுகள் மொபைல் இன்டர்நெட்டை முடக்கும் நேரத்தில் பிராட்பேண்ட் கனெக்ஷன்ஸ் உதவிகரமாக இருக்கும். தொற்றுக்கு பிறகு பிராட்பேண்ட் பிளான்கள் மலிவாக கிடைக்கின்றன. அவசர நேரத்தில் நீங்கள் மட்டும் இன்டர்நெட்டை பயன்படுத்தி கொள்ளாமல் அருகில் உள்ள பிறரையும் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் பலருக்கும் உதவி செய்யலாம்.



    நம்பகமான VPN ஆப்-ஐ பெறுங்கள்:

    பகுதியளவு இன்டர்நெட் முடக்கத்தின் போது, இன்டர்நெட்டை பயன்படுத்த பணம் செலுத்தி வாங்கப்படும் நம்பகமான VPN ஆப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் முழு இன்டர்நெட் முடக்கம் இருக்கும் போது, VPN ஆப்ஸ்களால் எந்தப் பயனும் இருக்காது.

    உங்கள் சொந்த மெஷ் நெட்வொர்க்குகளை உருவாக்கவும்:

     

    ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க்குகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? Bridgefy, FireChat போன்ற ஆப்ஸ்ளைபயன்படுத்தி, உங்களுக்கு அருகிலுள்ளவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். ப்ளூடூத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப இந்த ஆப்ஸ்கள் அனுமதிக்கின்றன.

    also read : டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்தால் கரண்ட் பில் ஏகிறும் .. அதிர்ச்சித் தகவல்



    பழைய 2ஜி ஹேண்ட்செட்:

    பழைய 2ஜி ஹேண்ட்செட் அவசர காலங்களில் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் மூலம் இணைந்திருக்க பெரும் உதவிகரமாக இருக்கும். மேலும், 2ஜி ஹேண்ட்செட்களின் பேட்டரி ஆயுள் தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களை விட அதிகம்.

    லேண்ட்லைனை கருத்தில் கொள்ளுங்கள்:

    உங்கள் பகுதியில் மொபைல் இன்டர்நெட்டில் இடையூறு ஏற்படுவதை நீங்கள் கண்டால், நீண்ட கால தீர்வாக லேண்ட்லைனை கருத்தில் கொள்வது நல்லது. பிராட்பேண்ட் திட்டத்துடன் இணைக்கப்பட்டாத ஒரு தனி லேண்ட்லைன் கனெக்ஷனை வைத்து கொள்ளுங்கள்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Internet, Phone call

    அடுத்த செய்தி