Home /News /technology /

சேவையை நிறுத்தும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.. ட்விட்டரில் நினைவுகளை பகிர்ந்துவரும் 90ஸ் கிட்ஸ்

சேவையை நிறுத்தும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.. ட்விட்டரில் நினைவுகளை பகிர்ந்துவரும் 90ஸ் கிட்ஸ்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

internet explorer: ட்விட்டர்வாசிகள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டால்ஜிக் நினைவுகளை கிண்டி எடுத்து நினைவு படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களின் ஆடம்பர அறிவியல் உலகின் நினைவுகளின் தொடக்கமான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூடப்படுகிறது

இணையம் எல்லா மக்களின் பயன்பாட்டிற்கும் வந்து கொண்டிருந்த காலத்தில் தேடுபொறியாக வந்தது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் . இன்று நம் தொலைபேசியிலும் கணினியிலும் ஆயிரம் ஆப்கள் இருக்கிறது. தேடலுக்கு மட்டுமே எத்தனையோ இருக்கிறது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் தனிக்காட்டு ராஜா. எல்லா தேடல்களும் அதிலிருந்து தான் தொடங்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால்  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜாவாஸ்கிரிப்ட்- பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேடுபொறி இது. இது தன் பயனர்கள் JPEGகள் மற்றும் GIFகளைப் பார்க்க வசதி ஏற்படுத்தியதால் 1996 இல் இது மிகவும் பிரபலமான தேடுபொறியாக மாறியது. இதை அடிப்படையாக வைத்துத் தான்  எட்ஜ், கூகுள் குரோம், குரோமியம் என்று வளர்ந்துள்ளது.

ஆனால் தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும் மேம்படுத்திய தேடுபொறிகளின் வரவாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜூன் 15 அன்று இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை ஜூன் 15ம் தேதி முதல்  நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  இதனால் ட்விட்டர்வாசிகள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.















இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொடர்..

“மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட வேகமான, பாதுகாப்பான மற்றும் நவீன உலாவல் அனுபவமாக இருப்பது மட்டுமின்றி, பழைய, பாரம்பரிய இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு முக்கிய பொறியாக விளங்குகிறது. மைக்ரோசாஃப்ட் எட்ஜில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்முறை (“ஐஇ மோட்”) உள்ளமைக்கப்பட்டுள்ளது, எனவே மைக்ரோசாஃப்ட் எட்ஜில் இருந்து அந்த பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் நேரடியாக அணுகலாம்" என்று மைக்ரோசாஃப்ட் எட்ஜின் பார்ட்னர் குரூப் புரோகிராம் மேலாளர் சீன் லிண்டர்சே கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Internet, Twitter

அடுத்த செய்தி