இணைய பிரவுசர்களின் பிதாமகனாக கருதப்படும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது 28 ஆண்டுகால செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இந்த உலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேடி தெரிந்துகொள்ளும் வசதி திறனை கொண்ட இணைய பிரவுசராக திகழ்ந்து வருவது கூகுள். ஆனால், இணைய உலகத்தின் ஆரம்ப காலகட்டமான 90கள் மற்றும் 2000த்தின் தொடக்கதில் டாப் இணைய பிரவுசராக இருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ராடக்டான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.
1995இல் வின்டோஸ் 95 ஓஸ் உடன் வெப் பிரவுசராக அறிமுகமான இன்டர்நெட் எகஸ்ப்ளோரர், அடுத்த சில ஆண்டுகளலில் உலகம் முழுவதும் கோலோச்சியது. 2003 ஆம் ஆண்டில் 95% இணைய யூசர்களுடன் அதிகபட்ச யூசர்களைப் பெற்ற பிரவுசராக இருந்தது. புதிய பிரவுசர்களின் வருகையால் இதன் சேவை மெல்ல மெல்ல சரிவை சந்தித்து.
2004இல் மொஸில்லா பயர்பாக்ஸ் வருகை இன்டர்நெட் எகஸ்ப்ளோரரின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தொடங்கியது. அதன் பின்னர் 2008இல் வருகை தந்த கூகுள் நிறுவனம் அனைத்து பிரவுசர்களையும் அடித்து துவம்சம் செய்து தனிக்காட்டு ராஜாவாக இணைய உலகை வலம் வருகிறது. கூகுளின் வருகை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை சந்தையில் எழும்ப விடாமல் முடக்கிப்போட்டது. கடந்த சில ஆண்டுகளாக இறுதியின் விளிம்பில் இருந்த இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யூசர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது 28 ஆண்டுக்கு சேவைக்குப் பின் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தனது இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது. இதை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சப்போர்ட் பக்கத்தில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. வின்டோஸ் 10 யூசர்களுக்கு மைக்ரோசாப்ட் எட்ஜ் வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.