சர்வதேச மகளிர் தினம்-- பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினம். பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்திலும் குடும்ப சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது அவசியமும் கூட.
தற்போது, பெண்கள் எல்லா துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். அவர்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அரசியல் தொடங்கி சமூகம், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச மகளிர் தினத்திற்கு இந்தாண்டு கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை எடுத்தது, ‘DigitALL: பாலின சமத்துவத்திற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்’ ஆகும்.
மேலும், இந்த கருப்பொருளின் நோக்கம், நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் தொழில்நுட்பம், ஆன்லைன் கல்விக்கு பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவது ஆகும். வளரும் தொழில்நுட்ப உலகில் உலகமயமாக்கலின் முன்னேற்றத்துடன், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சற்று குறைந்ததுபோல் தோன்றினாலும், 21ஆம் நூற்றாண்டிலும் பெண்களால் தங்கள் முழு திறனை உணர்ந்துகொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் சில விஷயங்கள் இன்னும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இவற்றை அணுகும் வகையில், இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ஐ.நா., பாலின சமத்துவதிற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் என்பதை நோக்கமாக தேர்ந்தெடுத்துள்ளது.
கணினி உலகின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு என ஆக்ரோஷமாக தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில், அதன் வளர்ச்சியில் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் எண்ணிலடங்கா வண்ணம் பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், டிஜிட்டல் உலகில் பெண்களை பொறுத்தவரை, அவர்கள் வரலாற்று ரீதியாகவோ அல்லது பாராட்டும் வகையிலோ அவர்களின் சாதனைகள் போற்றப்படுவதில்லை.
இன்று, டிஜிட்டல் அணுகலில் தொடர்ச்சியான பாலின இடைவெளியானது பெண்களை தொழில்நுட்பத்தின் முழு திறனையும் பெறவிடாமல் தடுக்கிறது. STEM கல்வி (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மற்றும் தொழில்களில் அவர்களின் குறைவான பிரதிநிதித்துவம் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் அது சார்ந்த நிர்வாகத்தில் அவர்கள் பங்கேற்பதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளதாகவும் கருதப்படுகிறது. சமூக வளைதலங்களில் பாலின அடிப்படையிலான வன்முறையின் பரவலான அச்சுறுத்தல்- சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாததால் அவர்கள் ஆக்கிரமித்துள்ள டிஜிட்டல் இடங்களிலிருந்து அடிக்கடி அவர்களை வெளியேற்றுகிறது.
மகளிர் தினம் : உடல் தோற்றம் குறித்த புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்த நீடா அம்பானி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.