• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Intel - Jio Deal: ஜியோவில் ரூ.1,894.5 கோடி முதலீடு செய்கிறது இன்டெல்

Intel - Jio Deal: ஜியோவில் ரூ.1,894.5 கோடி முதலீடு செய்கிறது இன்டெல்

jio

jio

ஜியோ நிறுவனத்தின் 0.39 சதவீத பங்குகளை ரூ. 1894.50 கோடிக்கு இன்டெல் நிறுவனம் வாங்குகிறது. கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ்  குழுமத்தில் டிஜிட்டலில் நடந்திருக்கும் பன்னிரண்டாவது முதலீடு இதுவாகும்.

  • Share this:
    ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 0.39 சதவீத பங்குகளை வாங்க, இன்டெல் ரூ. 1894.50 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் இன்று அறிவித்துள்ளது. இன்டெல்-ஜியோ (Intel-Jio) ஒப்பந்தம், கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ்  குழுமத்தில் நடந்திருக்கும் 12 ஆவது ஒப்பந்தமாகும் .

    Intel தற்போது முதலீடு செய்திருக்கும் 1.894.5 கோடி ரூபாயையும் சேர்த்து, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் (இரண்டு முதலீடுகள்), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், பி.ஐ.எஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து ரூ .1,17,588.45 கோடியை திரட்டியுள்ளது.

    உலகில் ஒரு நிறுவனம் திரட்டிய மிகப்பெரிய தொடர்ச்சியான நிதியில், இதுவே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது.

    திரைப்படம், செய்தி மற்றும் இசைச் செயலிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோ, உலகில் எங்கும் நடைபெறாத ஒரு மிகப்பெரிய தொடர்ச்சியான நிதி திரட்டலை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

    ஏப்ரல் 22 அன்று பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ .43,574 கோடிக்கு 9.99 சதவீத பங்கு விற்பனை செய்தது. இத முலம், ஜியோ தனது  நிதிதிரட்டல் செயல்பாட்டை தொடங்கியது.

    இன்டெல் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது,  பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அதிநவீன வடிவமைப்பு வசதிகளுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

    இண்டெல்-ஜியோ ஒப்பந்தம்


    இன்டெல் முதலீடானது, செயற்கை நுண்ணறிவு, தன்னியல்பு வாகனங்கள், டேட்டாசென்டர் மற்றும் கிளவுட், 5 ஜி, அடுத்த தலைமுறை கணக்கீடு மற்றும் பரந்த அளவிலான பிற தொழில்நுட்பங்களை குறிவைத்து புதுமையான தொடக்கங்களில் முதலீடு செய்கிறது. 1991 முதல், இன்டெல் முதலீடு, உலகளவில் 1,582-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 12.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: