முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு டஃப் கொடுக்கப்போகும் இன்ஸ்டா... வெளியான அசத்தல் அறிவிப்பு.! 

ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு டஃப் கொடுக்கப்போகும் இன்ஸ்டா... வெளியான அசத்தல் அறிவிப்பு.! 

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram | இன்ஸ்டாகிராம் யூஸர்கள் மற்றவர்களின் போஸ்ட்கள் மற்றும் ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் ஆப்ஷன் விரைவில் வழங்கப்படும் என்றும், அதற்கான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவினாலும், இன்ஸ்டாகிராம் அளவிற்கு இளம் தலைமுறையினர் இடையே பிரபலம் கிடையாது. குறிப்பாக இந்தியாவில் டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் அதன் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

போதாக்குறைக்கு இளம் தலைமுறையினரைக் கவரும் விதமாக அவ்வப்போது லே அவுட் முதல் சேவைகள் வரை பலவற்றையும் அப்டேட் செய்து வருகிறது. எனவே தான் ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியா முழுவதும் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 11 கோடியே 87 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமை டவுன்லோடு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் பிரபலமான தளமாக இருந்தாலும் அதில் ட்விட்டர் ஃபேஸ்புக்கைப் போல் நமக்கு பிடித்த பிரபலங்கள், நண்பர்கள் பதிவிடும் வீடியோக்கள், போட்டோக்களை ரீபோஸ்ட் செய்ய முடியாது. வெறுமனே லைக் மற்றும் கமெண்ட் செய்யும் வசதிகள் மட்டுமே யூஸர்களுக்கு உண்டு. அடிக்கடி தன்னை அப்டேட் செய்து வரும் இன்ஸ்டாகிராம், விரைவில் யூஸர்கள் பிறரது பதிவுகள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை ரீபோஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷனை பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் தற்போது பிறருடைய ஸ்டோரிக்களை ரீபோஸ்ட் செய்யும் அம்சம் உள்ளது போலவே, போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் பதிவுகளை ரீபோஸ்ட் செய்யவதற்கான அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை முயற்சி தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் யூஸர்களுக்கு புதிய அம்சம் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குதளம் மற்றும் அதன் டெவலப்பர்களின் சோதனைகள் முடிந்தவுடன், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கான அப்டேட் வெர்ஷன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

இன்ஸ்டாகிராம் யூஸர்களில் சுயவிவரப் பிரிவில் டேக் விருப்பத்திற்கு அடுத்ததாக ரீபோஸ்ட் ஆப்ஷன் இடம் பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் டிக்-டாக்கைப் போலவே தன்னை மாற்றிக்கொண்டு வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

Also Read : விரைவில் வருகிறது ஃபேஸ்புக் வாடிக்கையாளர் சேவை மையம்!

top videos

    பிரபல மாடலான கைலி ஜென்னர் மற்றும் ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் ஆகியோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் டிக்-டாக்கை பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டியது பெரும் விவாதமாக மாறியது. போட்டோக்களை ரீல்ஸ் வீடியோக்களை மாற்றுவது குறித்தும், ஸ்கிரீனில் மாற்றம் கொண்டு வர உள்ளதாகவும் இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசெரி அறிவித்தது விமர்சனங்களை உருவாக்கியதை அடுத்து அதில் சில திருந்தங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவெடுத்தது. தற்போது யூஸர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ரீபோஸ்ட் ஆப்ஷனை சோதனை செய்யும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் இறங்கியுள்ளது.

    First published:

    Tags: Instagram, Technology