Home /News /technology /

இன்ஸ்டாகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம் விரும்பிகளை குஷிப்படுத்தும் புதிய அம்சம்

இன்ஸ்டாகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம் விரும்பிகளை குஷிப்படுத்தும் புதிய அம்சம்

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

புதிய அம்சங்களை பற்றி பேசும் போது, முதலாவதாக வரவிருக்கும் லைவ் ஸ்ட்ரீம்களை பற்றிய ப்ரொபைல் பேனரை யூசர்களுக்கு காட்சிப்படுத்தும் ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மெட்டாவுக்குச் சொந்தமான (பழைய பெயர் - பேஸ்புக்) பிரபல போட்டோ ஷேரிங் பிளாட்பாரம் ஆன இன்ஸ்டாகிராம், அதன் யூசர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில புதிய அம்சங்களை பற்றிய அப்டேட்டை வழங்கியுள்ளது மற்றும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத "கட்டணம் செலுத்தும்" ஒரு சந்தா முறையையும் அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சங்களை பற்றி பேசும் போது, முதலாவதாக, வரவிருக்கும் லைவ் ஸ்ட்ரீம்களை பற்றிய ப்ரொபைல் பேனரை யூசர்களுக்கு காட்சிப்படுத்தும் ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது உங்களுக்குப் பிடித்த கிரியேட்டர்களிடமிருந்து வரவிருக்கும் ஒரு லைவ்வைப் பற்றி உங்களுக்கு முன்னரே தெரிவிக்கும் ஒரு அம்சம் வெளியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆன ஆடம் மொஸ்ஸெரி, யூசர்கள் இப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலில் ஒரு பேட்ஜை காட்சிப்படுத்தலாம்" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார், மேலும் "அந்த பேட்ஜ் வழியாக அவர்கள், தாங்கள் லைவ் ஸ்ட்ரீம் வருவதை மற்றவர்களுக்குத் (குறிப்பாக பின் தொடர்பவர்களுக்கு) தெரியப்படுத்தலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாட்ஸ்அப் யூசர்களுக்காக வரும் புதிய பில்டர்கள்!

ஒரு கிரியட்டரின் ப்ரொபைலில் குறிப்பிட்ட பேனர் தோன்றியதும், அந்த கிரியேட்டரின் லைவ் ஸ்ட்ரீம் பற்றிய நோட்டிபிகேஷன்ஸை பெற ஃபாலோவர்ஸ் அதை சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் பயனர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஷெட்யூல்ட்டு லைவ்களை (Scheduled Lives) உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட லைவ் வரவுள்ளது என்றால், அவைகள் சைட்-ஸ்க்ரோலிங் லிஸ்ட் ஆக காட்டப்படும்.

இதற்கு முன்னதாக பயனர்கள், ஒரு போஸ்ட் அல்லது ஸ்டோரி வழியாக தான் வரவிருக்கும் லைவ்களைப் பற்றி தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் இந்த புதிய அம்சத்தின் மூலம், இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது ஷெட்யூல்ட்டு லைவ்களை பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்க ஒரு பிரத்யேக வழியை பெற்றுள்ளனர்,

இதையும் படிங்க :  ஸ்மார்ட் ஃபோன் தொலைந்து விட்டதா.? வங்கி விவரங்கள் & ஆன்லைன் வாலட்களை பாதுகாப்பது எப்படி..

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட பேட்ஜ் ஆனது, ஒரு அக்கவுண்ட்டை ஃபாலோவர்ஸ்களுக்கு மட்டும் தெரியாமல், மேலும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய வண்ணம் குறிப்பிட்ட ப்ரொபைல் கடக்கும் எவருக்கும் தெரியும்.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆன ஆடம் மொஸ்ஸெரி மேலும் கூறுகையில், பயனர்கள் இப்போது ஆப்பில் உள்ள எந்த வீடியோ கன்டென்ட்டையும் ரீமிக்ஸ் (Remix) செய்யலாம் என்றும் குறிப்பிட்டார். இது சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் அறிவித்த ஒரு பெரிய மாற்றமாகும் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் ஆகும்.

இதையும் படிங்க :  ஜிமெயில், யூடியூப் மற்றும் ஜிபே-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?

நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதன் டிக் டாக் டூயட்ஸ் வெர்ஷன் ஆன ரீமிக்ஸ்-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் ரீல்ஸ் வீடியோவை மற்றொரு பயனரின் வீடியோவுடன் ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.

மேற்குறிப்பிட்ட புதிய அம்சங்களுக்கு கூடுதலாக, இன்ஸ்டாகிராம் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் அதன் கிரியேட்டர் சந்தாக்களின் (creator subscriptions) ஆரம்ப கால சோதனையையும் அறிமுகம் செய்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரியேட்டர்களுக்கு சில கூடுதல் திறன்களை வழங்கும். இதன் கீழ் அவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு பிரத்யேக இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகளுக்கான கட்டண அணுகலை (பெயிட் அக்செஸ்) வழங்க முடியும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Instagram

அடுத்த செய்தி