இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் இன்ஸ்டாகிராமின் "லைவ் ரூம்ஸ்" அம்சம்!

இன்ஸ்டா லைவ் ரூம்

லைவ் ரூம்ஸ் அதிக பார்வையாளர்களை ஈடுபடுத்த உதவும் என்றும், தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உள்ளமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
லைவ் ரூம்ஸ்(Live Rooms) அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்ஸ்டாகிராம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இன்ஸ்டா பயனர்களை வீடியோ மூலம் நேரலையில் சந்திக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த லைவ் ரூம்ஸ் மூன்று நபர்களை சேர்க்க முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் கேமரா பக்கத்தில் உள்ள நேரடி செயல்பாட்டின் ஒரு நீட்டிப்பாகும்.

முன்னதாக இதில் இரண்டு பயனர்களை ஒன்றாக இணைந்து ஒரு லைவ் செஷன் செய்யும் படியாக இருந்தது. அதுவே தற்போது வெளியாகியுள்ள புதிய அம்சத்துடன், பயனர்கள் மூன்றாவதாக ஒரு விருந்தினரை லைவ் செஷனில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. லைவ் ரூம்ஸ் வரும் நாட்களில் OTA புதுப்பிப்பு வழியாக வெளிவரும். மேலும் இதுகுறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சொந்தமான தளம் ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, " லைவ் ரூம்களுக்கான ஆரம்ப சோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த அம்சம் பரவலாக வெளிவரும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கொரோனா தொற்றுநோய்களின் போது இந்த தளத்தை பெரிதும் நம்பியுள்ள பல தொழில்முறை பயனர்கள் மற்றும் வரவிருக்கும் படைப்பாளிகளுக்கு இந்த புதிய அம்சம் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும்" என்று நிறுவனம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் லைவ் வியூஸ் (Live Views) வாரந்தோறும் 60 சதவிகிதம் வளர்ந்ததாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. எனவே லைவ் ரூம்களும் சாதகமான ஈடுபாடுகளைக் காணும் என்று நம்பியுள்ளது. ஆரம்பகால சோதனைகள் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க படைப்பாளர்களான ஷெரீன் பர்வானி, மனவ் சாப்ரா மற்றும் ரோஹினா ஆனந்த் கிரா ஆகியோருடன் நடத்தப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த வளர்ச்சி குறித்து பேசிய பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் அஜித் மோகன், “ இன்ஸ்டாகிராமில் கலாச்சாரத்தையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதில் படைப்பாளிகள் முன்னணியில் உள்ளனர். மேலும் அவர்களை சிறப்பாக காட்டும் வகையில் பயனர்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து புதிய அம்சங்களை கண்டுபிடித்து வருகிறோம். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் லைவ் விரிவான பயன்பாட்டைக் கண்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக உடல் ரீதியான சமூக விலகல் இன்னும் தொடர்வதால், நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் பார்வையாளர்களை ஒன்றிணைப்பதற்கும், அர்த்தமுள்ள உரையாடல்களை வளர்ப்பதற்கும் லைவ் ரூம்ஸ் ஒரு மதிப்புமிக்க அம்சமாக இருக்கும். 

Also read... "பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் டேஸ்" விற்பனை: லேப்டாப்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிப்பு!

ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, லைவ் ரூம்களின் சோதனை மற்றும் வெளியீடு வரை, எதிர்காலத்திற்காக தயாரிப்புகள் வடிவமைக்கப்படுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார். லைவ் ரூம்ஸ் அதிக பார்வையாளர்களை ஈடுபடுத்த உதவும் என்றும், தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உள்ளமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. 

இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ்களை பயன்படுத்த, பயனர்கள் இன்ஸ்டாகிராம் கேமரா பக்கத்தைத் திறக்க வேண்டும். அதில்  லைவ் கேமரா விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விருந்தினரைச் சேர்க்க, கேமரா -> ரூம்ஸ் ஐகானைத் கிளிக் செய்ய வேண்டும். முந்தைய நேரடி அம்சத்தைப் போல் இல்லாமல், பயனர்கள் இப்போது அவர்கள் விரும்பும் பார்வையாளர்களை மேனுவலாகவும் சேர்க்கலாம். லைவ் ரூம்ஸ் அம்சம் விரைவில் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published: