ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகளை மறைக்க வேண்டுமா.? இதோ உங்களுக்கான டிப்ஸ்.!

இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகளை மறைக்க வேண்டுமா.? இதோ உங்களுக்கான டிப்ஸ்.!

இன்ஸ்டா

இன்ஸ்டா

Instagram Update | யூசர்களுக்கு வசதியாக இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகள் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கையை எப்படி மறைப்பது என்பது குறித்த அம்சங்களை தற்போது வெளியிட்டுள்ளது. எப்படி என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாட்ஸ் அப்பிற்கு அடுத்தப்படியாக இன்றைக்கு இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பட்ட வயதினரும் பயன்படுத்தக்கூடிய பிரபலமான சோசியல் மீடியா தான் இன்ஸ்டாகிராம். புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் என பலவற்றையும் பகிரும் தளமான இன்ஸ்டாவை உலகளவில் பல மில்லியன் கணக்கான யூசர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இன்ஸ்டாவில் ரீல்களைப் பகிர்வது என்பது பிரபலமாகியுள்ள நிலையில், சில யூசர்கள் தங்களது வீடியோக்களுக்கு வரக்கூடிய லைக்குகள் மற்றும் வியூஸ்களின் எண்ணிக்கையை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இந்நிலையில் இதுப்போன்ற யூசர்களுக்கு வசதியாக இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகள் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கையை எப்படி மறைப்பது என்பது குறித்த அம்சங்களை தற்போது வெளியிட்டுள்ளது. எப்படி என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

இன்ஸ்டாவில் லைக்குகள் மற்றும் வியூஸ்களின் (hide likes and views) எண்ணிக்கையை மறைக்கும் முறை:

இன்ஸ்டாவில் நீங்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை மறைப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. மிகவும் எளிதான முறையில் நீங்கள் மேற்கொள்ளலாம். பயனர்கள் தங்கள் இடுகைகளில் உள்ள விருப்பங்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை யார் பார்க்க வேண்டும்? என்பதை நீங்களே தேர்வு செய்துக் கொள்ளலாம்.

நீங்கள் இன்ஸ்டாவில் அனுப்பவுள்ள போஸ்ட்டை மறைக்க விரும்பினால், இடுக்கையைப் பகிர்வதற்கு முன்னர் advanced settings என்ற ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் hide ஆப்சன் என்பதை கிளிக் செய்தால் போதும். இப்போது உங்களுக்கு வரக்கூடிய லைக்குகளின் எண்ணிக்கையை யாரும் பார்க்க முடியாது.

Also Read : எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

மற்றொரு வழிமுறை ஒன்றில் முதலில், இன்ஸ்டா பக்கத்தை ஓபன் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் setting ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது Post என்பதை நீங்கள் பார்க்க முடியும். இதனையடுத்து hide என்ற ஆப்சனை கிளிக் செய்து யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பது குறித்து தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இனி நீங்கள் அப்டேட் செய்துள்ள புகைப்படம் அல்லது ரீல்ஸ்க்கு எத்தனை லைக்குகள் வந்துள்ளது என்பதை யாரும் பார்க்க முடியாது.

ஒரு வேளை ஏற்கனவே நீங்கள் ஏதாவது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருந்தால் அதனை மறைப்பதற்கு, முதலில் நீங்கள் அப்லோடு செய்துள்ள விஷயங்களை கிளிக் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரைட் கிளிக் செய்யும் போது hide என்ற ஆப்சன் வரக்கூடும். அதைத் தேர்வு செய்யும் போது நீங்கள் ஏற்கனவே போஸ்ட் செய்துள்ள புகைப்படமோ? அல்லது வீடியோக்களுக்கான லைக்குகளை இனி பார்க்க முடியாது.

Also Read : 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செக்... யூஸர்களின் வயதை சரிபார்க்கும் சோதனையை விரிவுபடுத்தும் இன்ஸ்டா..!

இன்ஸ்டாவில் உங்களுக்கு வரக்கூடிய லைக்குகள் மற்றும் வியூஸ்களின் எண்ணிக்கையையும் இன்ஸ்டா யூசர்கள்கள் இதுபோன்ற வழிமுறைப் பின்பற்றி இனி சுலபமாக மறைக்க முடியும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Instagram, Technology