பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் முதலில் புகைப்படங்களை மட்டும் பகிரும் தளமாக இருந்தது. ஆனால், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ தளங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, இதில் புதிதாக ரீல்ஸ் ஆப்சன் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட வீடியோ தளங்கள் திடீரென தடை செய்யப்பட்ட நிலையில், யூசர்கள் இன்ஸ்டாகிராம் தளத்துக்கு செல்லத் தொடங்கினார்.
இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் யூசர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. டிக்டாக் இல்லாத குறையை இன்ஸ்டாகிராம் பூர்த்தி செய்துவிட்டது என்றே சொல்லலாம். அதேநேரத்தில், இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் யூசர்களுக்கு சில குறைபாடுகள் இருந்தது. அதனை அறிந்த பேஸ்புக், அடுத்தடுத்த அப்டேட்டுகளில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் லேட்டஸ்டாக புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர்களில் லிங்குகளை ஷேர் செய்ய முடியாது. புகைப்படங்கள் மட்டும் ஷேர் செய்யும் வகையில் இருந்தது.
இது வணிகள், நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்களுக்கு ஏற்றதளமாக அமையவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்களின் புரோடக்டுகள் குறித்த முழுமையான விவரங்களையும், அதற்கான தளத்தையும் யூசர்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை இருந்தது.
Must Read | தொழில்நுட்ப உலகில் அடுத்த மைல்கல்… ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் பிரம்மாண்டமான விர்ச்சுவல் ரியாலிட்டி!
ஒரு பிராண்ட், அதனுடைய சிறப்புகளை புகைப்படங்கள் அல்லது வீடியோ வழியே மட்டும் விளம்பரப்படுத்த முடியும். ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு அந்த பிராண்ட் பிடித்திருந்தால், பிராண்டின் வெப்சைட் தனியாக பிரவுசரில் தேடி, அங்கு சென்று முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால் விளம்பர நிறுவனங்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பிராண்டுகளின் லிங்குகளை ஷேர் செய்யும் வசதியை இன்ஸ்டாகிராம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த இன்ஸ்டாகிராம், லிங்குகளை ஷேர் செய்யும் வசதியை கொண்டு வருவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வந்தது. தற்போது, அந்த அப்டேட் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்டுள்ளது. இது வணிகர்கள், விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராமை இந்தியாவில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், விளம்பர நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விரைவாக ரீச் செய்வதற்கு இதுபோன்ற வீடியோ தளங்களையே பயன்படுத்தி வருகின்றன.
Must Read | ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் அப்ளை செய்ய ஸ்டெப்ஸ் இதோ!
இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிங்குகளை எப்படி ஷேர் செய்வது என தெரியாதவர்களுக்கு, கீழே படிப்படியான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வழக்கம்போல் யூவர் ஸ்டோரியில் கன்டென்டு ஸ்டோரியை அப்லோடு செய்யுங்கள்
2. பின்னர் நேவிகேஷன் பாரில் இருக்கும் ஸ்டிக்கர் டூலை தேர்வு செய்ய வேண்டும்
3. அதில், லிங்க் ஸ்டிக்கரை தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்
4. இப்போது நீங்கள் ஷேர் செய்ய விரும்பிய லிங் உங்கள் ஸ்டோரியில் சேர்ந்திருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Instagram, Mark zuckerberg