ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்ஸ்டாகிராமில் உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ் ஆகியவற்றை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ் ஆகியவற்றை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram Tips And Tricks: ஒரு இன்ஸ்டாகிராம் பதிவாளர் அவர்களுடைய சொந்த பதிவுகளை பதிவு செய்வதற்கு முன்பாகவும், பதிவு செய்ததற்கு பின்பாகவும் லைக்ஸ் என்பதை ஹைட் செய்ய முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மேம்பட்ட வசதிகள் மற்றும் ஆப்சன்ஸ் ஆகியவற்றை அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் இன்ஸ்டாகிராம் வசதிகளை மேம்படுத்துவதுடன், பயனாளர்களின் பிரைவசியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் உங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் வியூவ்ஸ் மற்றும் லைக்ஸ் ஆகியவற்றை ஹைட் (மறைப்பது) செய்வது என்ற மிக முக்கியமான வசதியை மேம்படுத்த இன்ஸ்டாகிராம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. வெறுமனே எண்ணிலடங்காத வகையில் லைக்ஸ் பெறுவதை காட்டிலும், பதிவுகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இந்தப் புதிய வசதியை பயன்படுத்தி, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவாளர் அவர்களுடைய சொந்த பதிவுகளை பதிவு செய்வதற்கு முன்பாகவும், பதிவு செய்ததற்கு பின்பாகவும் லைக்ஸ் என்பதை ஹைட் செய்ய முடியும். இதேபோல, மற்றவர்களுடைய பதிவுகளுக்கான லைக்குகளை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றால், அதனையும் ஹைட் செய்ய முடியும்.

இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம் விரும்பிகளை குஷிப்படுத்தும் புதிய அம்சம்

பதிவுகளுக்கான லைக்குகளை ஹைட் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை திறந்து, உங்கள் புரொபைல் பக்கம் செல்லவும். வலது கார்னரில் 3 கோடுகள் தென்படும். அந்த மூன்று கோடுகளில் டேப் செய்தால், நிறைய ஆப்சன்ஸ் கொண்ட பட்டியல் திறக்கும். அந்த ஆப்சன்களில், செட்டிங்க்ஸ் என்பதை தேர்வு செய்யவும். இப்போது ஸ்கிரீனில் பல்வேறு ஆப்சன்ஸ் தோன்றும். அதில், ‘போஸ்ட்ஸ்’ என்பதை கண்டறிந்து, தேர்வு செய்யவும்.

இப்போது, ‘ஹைட் லைக்ஸ் அண்ட் வியூ கவுண்ட்ஸ்’ என்ற பட்டன் மீது டேப் செய்யவும். இது உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் பொருந்தும்.இது எல்லாவற்றையும் செய்த பிறகு, உங்கள் பதிவை அப்லோட் செய்யும் முன்பாக, ஸ்க்ரோல் டவுன் செய்து, ‘அட்வான்ஸ்டு செட்டிங்’ என்பதை தேர்வு செய்யவும். அங்கு உங்களுக்கு ‘ஹைட் லைக்ஸ் அண்ட் வியூ கவுண்ட்ஸ்’ என்பது தென்படும். அந்த பட்டனில் டேப் செய்தால், அந்த குறிப்பிட்ட பதிவுக்கு மட்டும் லைக்ஸ், வியூஸ் ஹைட் ஆகும்.

இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராமில் உங்களின் இமெயில் முகவரியை மாற்றுவதற்கான எளிய வழி இதோ..

உங்கள் பதிவுகளை ஷேர் செய்த பிறகு எப்படி ஹைட் செய்வது :

உங்கள் இன்ஸ்டாகிராம் புரொபைல் ஓப்பன் செய்யவும். எந்த பதிவுக்கு லைக்ஸ் மற்றும் வியூஸ் ஹைட் செய்ய விரும்புகிறீர்களோ, அதை தேர்வு செய்யவும். பதிவுகளின் வலது கார்னரில் உள்ள மூன்று புள்ளிகளை டேப் செய்யவும். இப்போது ஹைட் லைக்ஸ் அண்ட் வியூ கவுண்ட்ஸ்’ என்பதை தேர்வு செய்யவும்.

லைக்ஸ் பெறும் நோக்கில் பயனாளர்கள் தரம் குறைந்த பதிவுகளை வெளியிடுகிறார்கள் என கருதப்படும் நிலையில், இந்த புதிய ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், லைக்ஸ் மற்றும் வியூஸ் குறித்து கவலை கொள்ளாமல் நல்ல தரமான பதிவுகளை பயனாளர்கள் வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது.

First published:

Tags: Instagram, News On Instagram