Home /News /technology /

இன்ஸ்டாகிராமில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? - இதோ அதற்கான டிப்ஸ்

இன்ஸ்டாகிராமில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? - இதோ அதற்கான டிப்ஸ்

Instagram

Instagram

Instagram tips and tricks : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், கூடுதலாக அங்கு வீணாகும் நேரத்தை நீங்கள் சேமித்துக் கொள்ள முடியும்.

போட்டோ, வீடியோ, கதைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் மனதில் உடனடியாக தோன்றுவது இன்ஸ்டாகிராம் ஆகும். மற்ற ஆப்-களை காட்டிலும் இது வசதிகரமானதாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ஆப் மிகவும் பிரபலம்.

நீங்கள் பாலோ செய்யும் நபர்களின் போஸ்ட், வீடியோ மற்றும் இதர அப்டேட்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் பப்ளிக் வியூ கீழ் வைத்திருந்தால், அது எல்லோரின் பார்வைக்கும் கிடைக்கும். இதுபோன்று மற்றவர்களின் பதிவுகளையும் நீங்கள் பார்க்கலாம். ஹோம் பேஜை ஸ்க்ரோல் செய்வதன் மூலமாக எண்ணற்ற பதிவுகள், டிரெண்டிங் வீடியோக்கள், சுவராஸ்யமான தகவல்கள் என ஏராளமானவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இறுதியில் நீங்கள் இதில் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.

ஆனால், இன்ஸ்டாகிராம் பார்ப்பதை மட்டுமே உங்கள் முழுநேர பழக்கமாக மாற்றிக் கொள்ள முடியாது அல்லவா?

ஆகவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், கூடுதலாக அங்கு வீணாகும் நேரத்தை நீங்கள் சேமித்துக் கொள்ள முடியும். கடைசியாக 7 நாட்களில் நீங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை எவ்வளவு நேரம் பார்த்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்ஸ்டாகிராம் ஆப் ஓப்பன் செய்தது முதல் அதை கிளோஸ் செய்வது வரையிலும் அல்லது வேறு ஆப் பயன்பாட்டுக்கு நீங்கள் செல்லும் வரையிலும் இந்த நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராமில் இனி எந்த வீடியோவையும் ரீமிக்ஸ் செய்யலாம் - எப்படித் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் செலவிட்ட நேரத்தை கண்டறியும் முறை

* உங்கள் ஸ்மோர்ட்போனில் இன்ஸ்டாகிராம் ஆப்-ஐ ஓப்பன் செய்யவும்.
* ப்ரொபைல் என்பதை டேப் செய்யவும் அல்லது உங்கள் ப்ரொபைல் பக்கத்தின் வலது கார்னரில் உள்ள உங்கள் படத்தை டேப் செய்யவும்.
* பின்னர் மெனு என்பதை டேப் செய்யவும்.
* யுவர் ஆக்டிவிட்டி என்பதில் டேப் செய்து அதில் டேப் டைம் செய்யவும். இதில், கடந்த வாரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் செலவிட்ட சராசரி நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம் விரும்பிகளை குஷிப்படுத்தும் புதிய அம்சம்

உங்கள் போனில் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டால் செய்வது எப்படி

* போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யவும்
* அது டவுன்லோடு ஆனதும், ஓப்பன் என்பதை டேப் செய்யவும்
* இப்போது உங்கள் இ-மெயில் முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்து புதிய கணக்கை தொடங்கவும்.
* உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு ஆகியவற்றை உருவாக்கவும். ஃபேஸ்புக் பயன்படுத்தியும் நீங்கள் லாகின் செய்யலாம்.
* இ-மெயில் முகவரியானது நீங்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பாஸ்வார்டு மறந்து விட்டால் இமெயில் மூலமாக திரும்ப பெறலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Instagram

அடுத்த செய்தி