Home /News /technology /

Pornhub-ன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டை திடீரென முடக்கிய இன்ஸ்டாகிராம்.!

Pornhub-ன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டை திடீரென முடக்கிய இன்ஸ்டாகிராம்.!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram | ஆன்லைன் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆபாச வெப்சைட்கள் கொட்டி கிடக்கின்றன. இதில் ஒருசில வெப்சைட்கள் சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கின்றன. இதில் ஒன்று தான் PornHub.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோஷியல் மீடியாவில் பிரபல ஃபோட்டோ & வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்மாக இருக்கும் இன்ஸ்டாவில், PornHub வைத்திருந்த அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்  நீக்கப்பட்டு உள்ளது. சிவில் உரிமைக் குழுக்களின் (civil rights groups) அழுத்தத்திற்கு மத்தியில் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டா, வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு வெப்சைட்டான PornHub-ன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டை நீக்கி இருக்கிறது.

இன்ஸ்டாவிலிருந்து நீக்கப்பட்டுள்ள PornHub-ன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் 13.1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும், சுமார் 6,200-க்கும் மேற்பட்ட போஸ்ட்களையும் கொண்டிருந்ததாக அமெரிக்க ஊடக நிறுவனமான வெரைட்டி தெரிவித்துள்ளது. எனினும் அக்கவுண்ட் ஏன் அகற்றப்பட்டது என்பதற்கான சரியான மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்களை இன்ஸ்டா வெளிப்படுத்தவில்லை.

இன்ஸ்டாவின் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் நிர்வாணம் மற்றும் பாலியல் கன்டென்ட்களை தடை செய்கிறது. இதை பின்பற்றி Pornhub-ன் இன்ஸ்டா அக்கவுண்ட் ஆபாச போஸ்ட்களை ஷேர் செய்யவில்லை. ஆனால் அவை நேரடியாக ஆபாசத்தை ஊக்குவிக்கின்றன என்று கூறப்படுகிறது. மேலும் PornHub-ன் இன்ஸ்டா அக்கவுண்ட்டில் ஷேர் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் போஸ்ட் பார்க்கும் யூஸர்களை ஆபாச கலைஞர்களாக ஆக்க ஊக்குவிப்பது போல இருந்தது என்று சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதனிடையே PornHub அக்கவுண்ட் இன்ஸ்டாவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு PornHub-க்கு எதிரான சமூக நல ஆர்வாளரான Laila Mickelwait, இன்ஸ்டாவின் கம்யூனிட்டி கைட்லைன்ஸ்களை மீறியதற்காக அக்கவுண்ட் தடை செய்யப்பட்டதாக கூறும் சில ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே Pornhub-ன் தாய் நிறுவனமான MindGeek-ன் விளம்பரப் பிரிவான TrafficJunky-ன் பேமென்ட் சலுகைகளை விசா மற்றும் மாஸ்டர்கார்டு கட் ஆஃப் செய்துள்ளது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

Pornhub-ன் செய்தித் தொடர்பாளர் இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், எங்கள் இன்ஸ்டா அக்கவுண்ட் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறி இருக்கிறார். ஏற்கனவே இதே போல Pornhub-ன் இன்ஸ்டா அக்கவுண்ட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை அக்கவுண்ட்டை நீக்கி சுமார் 7 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. மேலும் தடையின் பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி இதுவரை இன்ஸ்டா வெளிப்படுத்தவில்லை.

Also Read : 2.7 கோடி பதிவுகளை நீக்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் - மெட்டா நிறுவனம் அறிக்கை.!

இதனிடையே National Center on Sexual Exploitation அமைப்பும் தலைமை நிர்வாக அதிகாரியான டான் ஹாக்கின்ஸ் கூறுகையில், Pornhub உடன் கூட்டு சேர்வதை நிறுத்தி கொள்ள இன்ஸ்டா தைரியமாக முடிவெடுத்துள்ளது. பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Instagram, Technology

அடுத்த செய்தி