• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இன்ஸ்டாவில் விரைவில் அறிமுகமாகும் அசத்தலான புதிய அம்சம்..!

இன்ஸ்டாவில் விரைவில் அறிமுகமாகும் அசத்தலான புதிய அம்சம்..!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் ’ஸ்வைப் அப்’ ஆப்சன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Share this:
பேஸ்புக்கிற்கு சொந்தமான புகைப்பட தளமான இன்ஸ்டாகிராம் இம்மாத இறுதியில் "ஸ்வைப் அப்" விட்ஜெட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மட்டுமே இந்த விட்ஜெட் பயன்ப்பாட்டில் இருக்கும். அதன்பிறகு இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும். பிஸ்னஸ் அக்கவுண்ட் மற்றும் பிரபலமான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், தங்களது இன்ஸ்டா ஸ்டோரீஸில் கூடுதல் லிங்குகளை ஆட் செய்திருந்தால், அதனை ஸ்வைப் அப் செய்து, நேரடியாக வெப்சைட்டில் சென்று பார்க்கக்கூடிய வசதி கொடுக்கபட்டிருந்தது.

இதன் மூலம் பிஸ்னஸ் புரொடக்ட், கட்டுரை அல்லது சேவை தொடர்பான முழு தகவல்களையும் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதனை நீக்கும் இன்ஸ்டாகிராம் நிறுவனம், புதிதாக ஸ்டிக்கர் லிங்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. இது ஸ்வைப் அப் ஆப்சனின் மேம்பட்ட வடிவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வைப் அப் ஆப்சன் மூலம் யூசர்கள், தாங்கள் படிக்கும் கட்டுரைகள் அல்லது புரோடக்ட் தொடர்பான முழு தகவல்கள் அல்லது சேவைகளை தெரிந்து கொள்ளும்போது, அதற்கு தங்களுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்த முடியாது. படித்து தெரிந்து கொள்ள மட்டுமே முடியும்.

Also Read : உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த 8 ஆபத்தான ஆப் இருந்தால் டெலிட் செய்யவும் - பிளேஸ்டோரிலிருந்தும் நீக்கம்

புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்டிக்கர் லிங்குகளில், கட்டுரை அல்லது பிஸ்னஸ் புரொடக்டுகள் தொடர்பான தங்களின் எண்ண ஓட்டத்தை உடனடியாக வெளிப்படுத்தும் வசதி உள்ளது. இது குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால், அனைத்து யூசர்களுக்கும் இந்த சேவை கிடைக்காது. பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் 10, 000க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புதிய ஆப்சன் கொடுக்கப்பட உள்ளது. யூசர்களின் ரெஸ்பான்ஸைப் பொறுத்து வரும் காலங்களில் விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்டிக்கர் லிங்குகளைப் பொறுத்த வரைஅளவுகளை மாற்றவும், தாங்கள் விரும்பும் இடத்தில் ஸ்டிக்கர்களை வைக்கும் வசதி உள்ளிட்ட சில கூடுதலான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போல், புதிதாக இணைக்கப்பட்ட லிங்குகளுக்கு பார்வையாளர்கள் எதிர்வினையாற்றவும், பதிலளிகவும் முடியும். இதற்கு முன்பு பின்னூட்ட ஆப்சன்கள் கொடுக்கபட்டிருக்கவில்லை. அண்மையில், சில அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ளது. அதில், தவறான பின்னூட்டங்கள் மற்றும் மோசடி பதிவுகளை எச்சரிக்கும் ஆப்சன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா? - இவற்றை சரிபாருங்கள்!

நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், யூசர்களின் பாதுகாப்பு மற்றும் மோசடிகளை தவிர்க்கும் செக்யூரிட்டி விஷயத்திலும் இன்ஸ்டாகிராம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகிறது. அதேபோல், யூசர்களின் திருப்திபடுத்தும் வகையில், அவர்களை அசத்தும் வகையிலான புதிய அப்டேட்டுகளையும் கொண்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: