முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி வீடியோவை விட போட்டோகளில் தான் போக்கஸ் - இன்ஸ்டாகிராம் அறிவிப்பு

இனி வீடியோவை விட போட்டோகளில் தான் போக்கஸ் - இன்ஸ்டாகிராம் அறிவிப்பு

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram : ஒருவர் எத்தனை படங்கள் எத்தனை வீடியோ உள்ளடக்கங்களை பார்க்கிறார் என்பதை வைத்தே உள்ளடக்க சமநிலை என்பது குறிப்பிடப்படுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

2022 இல் அதிக வீடியோக்களில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் உள்ளடக்க சமநிலைக்காக  2023 இல் புகைப்படங்களின் மீது கவனம் செலுத்த இருப்பதாகவும் பிரபல சமூக வலை தளமான இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

2010 இல் படங்களை பகிர்வதற்கான பிரத்யேக தளமாக ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது சாட், வீடியோ பகிர்வு, லைவ் ஸ்ட்ரீம் என்று எல்லா வசதிகளுடன் இயங்கி வருகிறது. முக்கியமாக 2022 இல் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது இன்ஸ்டாகிராம் ரீல்கள் மிகவும் முக்கிய இடத்தை பெற்றது.

இதனால் இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்கள் தொடர்பான மேம்பாட்டு பணிகள், எடிட் ஆப்ஷன்கள், பில்டர்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தியது. வீடியோ உள்ளடக்கங்கள் அதிகம் பகிரப்பட்டது. இதனால் 2022 உள்ளடக்க எண்ணிக்கையில் வீடியோக்கள் எண்ணிக்கை என்பது சரசரவென்று ஏறியது. இதனால் படங்களுக்கான கவனம் என்பது குறைந்துவிட்டது.

ஒருவர் எத்தனை படங்கள் எத்தனை வீடியோ உள்ளடக்கங்களை பார்க்கிறார் என்பதை வைத்தே உள்ளடக்க சமநிலை என்பது குறிப்பிடப்படுகிறது. அந்த விதத்தில் 2022 இல் அதிக வீடியோக்கள் தான் பார்க்கப்பட்டுள்ளது. சர்ச் தளத்திரும் அதிக வீடியோ உள்ளடக்கங்கள் தான் காட்டப்பட்டுள்ளது.

அதோடு ஒட்டுமொத்த ஆண்டு அறிக்கையில் உள்ளடக்க சமநிலை என்பது இல்லாமல் போனதை நிறுவனம் கவனித்தது. இதனால் 2023 ஆண்டில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி சமீபத்தில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மக்களை அதிகப்படியான படங்களை உள்ளிட்ட வைப்பதற்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் மொசெரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் - வீடியோ உள்ளடக்கத்திற்கான சமநிலை காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Instagram