அறிமுகமான ஒரு மணி நேரத்திலேயே நீக்கப்பட்ட அப்டேட்...! வேதனையில் இன்ஸ்டாகிராம்

தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திய புதிய அப்டேட்-க்காக இன்ஸ்டாகிராம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: December 30, 2018, 1:46 PM IST
அறிமுகமான ஒரு மணி நேரத்திலேயே நீக்கப்பட்ட அப்டேட்...! வேதனையில் இன்ஸ்டாகிராம்
Instagram
Web Desk | news18
Updated: December 30, 2018, 1:46 PM IST
புதிய அப்டேட் ஒன்றை ஒரு மணி நேரத்திலேயே அதற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் அப்டேட்டை நீக்கியுள்ளது இன்ஸ்டாகிராம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி சமூக வலைதளங்களுள் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமானது. சர்வதேச அளவில் பிரபலங்கள் பலர் இன்ஸ்டாகிராம் பயனாளர்களாகவே உள்ளனர். புகைப்படங்கள் உடனான சிறு கதைகளைப் பதியும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இன்ஸ்டாகிராம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குப் பெரும் ஆதராவால் ஒரு புதிய அப்டேட்டை நேற்று அறிமுகப்படுத்தியது. ஆனால், அறிமுகமான ஒரு மணி நேரத்திலே அந்த அப்டேட் நீக்கப்பட்டது. தீவிர இன்ஸ்டாகிராம் வெறியர்களின் கடுமையான விமர்சனங்களை ஏற்ற இன்ஸ்டாகிராம் தனது தவறுக்கு வருந்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோம் பேஜ்-ல் அடுத்தடுத்தப் பதிவுகளுக்கு ‘ஸ்க்ரால்’ செய்வது நடைமுறை. ஆனால், இந்த ‘ஸ்க்ரால்’ ஆப்ஷனுக்குப் பதிலாக ‘டேப்’ ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்தது.

ஆனால், முன்னதாகவே ‘டேப்’ ஆப்ஷன் லைக் செய்வதற்கான அம்சமாக உள்ளது. இதனால் பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் உபயோகிப்பதில் சிக்கல் எழுந்தது. ‘டேப்’ செய்யும் போது அது அடுத்தப் பக்கத்துக்கு நகராமல் ‘லைக்’ ஆகியுள்ளது.

இந்த மோசமான அப்டேட்டைத் தான் ஒரு மணி நேரத்திலேயே இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.

மேலும் பார்க்க: எம்.ஜி.ஆர் ஓட்டு யாருக்கு சொந்தம்?
Loading...
First published: December 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...