டிக்டாக் செயலிக்கு இணையாக இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீனச் செயலிகள் தடை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அந்த இடத்தை ரீல்ஸை வைத்து நிரப்ப ஃபேஸ்புக் நிறுவனம் முயல்கிறது.

டிக்டாக் செயலிக்கு இணையாக இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
instagram Reels
  • Share this:
டிக்டாக் செயலிக்கு இணையாக இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ள Reels,  அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தளம், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பகிர்தலைப் பிரதானப்படுத்தி செயல்படுகிறது 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் டிக்டாக் ஃபீச்சர்ஸைப் போலவே Reels என்ற வசதியை இன்ஸ்டாகிராம் உருவாக்கி இந்தியாவில் சோதனை நிலையில் உள்ளது.

மேலும் படிக்க:-


மேலும் தடை செய்யப்படவிருக்கும் சீன ஆப்ஸ் பட்டியல் இதோ..

பதினைந்து விநாடிகளுக்கு மிகாமல், வீடியோக்களைப் பதிவு செய்து, எடிட் செய்து, ஏற்கெனவே இருக்கும் ஒலியுடனோ, புதிய ஒலியுடனோ சேர்த்துப் பகிரும் Reels வசதியை டெஸ்ட் செய்து இந்த மாத ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீனச் செயலிகள் தடை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அந்த இடத்தை Reels-ஐ வைத்து நிரப்ப ஃபேஸ்புக் நிறுவனம் முயல்கிறது.அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படவில்லையென்றாலும், அமெரிக்க அரசாங்கம் டிக்டாக் செயலி மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளது. கூகுளின் யூடியூப் தளத்தில் டிக்டாக்குக்கு போட்டியாக Shorts என்றொரு தளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் கடைசியில் Shorts அறிமுகமாக இருக்கிறது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading