டிக்டாக் போன்ற பிரபல ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்களுக்கு போட்டியாக ரீல்ஸ் போன்ற முன்முயற்சிகளில் இன்ஸ்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக IGTV app-ஐ ஷட் டவுன் செய்யும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டா உறுதிப்படுத்தியது. இந்நிலையில் ஆப் ஸ்டோர்களில் இருந்து மேலும் இரண்டு பழைய ஆப்ஸ்களை நீக்கி இருக்கிறது இன்ஸ்டா.
ஆம், கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse) மற்றும் பூமராங் (Boomerang) ஆகியவற்றுக்கான அதன் தனி ஆப்ஸ்-களை சத்தமின்றி நீக்கியுள்ளது இன்ஸ்டா. நாம் மேலே குறிப்பிடப்படி மெட்டாவுக்கு சொந்தமான சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம், TikTok போன்ற ஷார்ட்-வீடியோ பிளாட்ஃபார்ம்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இப்போது Reels மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் ஹைப்பர்லேப்ஸ் யூஸர்கள் டைம்-லேப்ஸ் (time-lapse) வீடியோக்களை உருவாக்க உதவியது. அதனை தொடர்ந்து கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட பூமராங், யூஸர்கள் முன்னும் பின்னும் சுழலும் ஷார்ட் வீடியோக்களை கிரியேட் செய்ய உதவியது. இந்த இரண்டில் பூமராங்கானது மெயின் இன்ஸ்டாகிராம் ஆப்ஸில் யூஸர்கள் பயன்படுத்த தற்போதும் கிடைக்கிறது. TechCrunch வழங்கி உள்ள தரவுகளின் படி ஹைப்பர்லேப்ஸ் மற்றும் பூமராங் ஆகியவை ஆப் ஸ்டோர்களில் மார்ச் 1, 2022 வரை இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. ஆப் ஸ்டோர்களில் இந்த இரண்டில் உலகளவில் பூமராங் 301 மில்லியன் லைஃப்டைம் டவுன்லோட்ஸ்களையும், ஹைப்பர்லேப்ஸ் வெறும் 23 மில்லியன் லைஃப்டைம் டவுன்லோட்ஸ்களையும் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also read... ஜியோ வாடிக்கையாளரா நீங்கள்? இந்த வழிகளைப் பயன்படுத்தி விருப்பமான பாடல்களை காலர் ட்யூனாக செட் செய்யலாம்
கூடுதலாக பூமராங் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்ட போது ஒரு நாளைக்கு சராசரியாக 26,000 டவுன்லோட்ஸ்கள் இருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பூமராங் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஆகிய இரண்டிலும் கிடைத்த, அதே நேரத்தில் ஹைப்பர்லேப்ஸ் iOS யூஸர்களுக்கு மட்டுமே கிடைத்தது இங்கே கவனிக்கத்தக்கது. IGTV மற்றும் முக்கிய இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் தவிர இன்ஸ்டாகிராம் லேஅவுட் ஆப்-ஆனது இரண்டு ஆப் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. மேலும் மிதமான ஹார்டுவேர் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்காக கூகுள் ப்ளேயில் இன்ஸ்டாகிராம் லைட் வெர்ஷன் ஆப் கிடைக்கிறது. மார்ச் 8-ஆம் தேதி வரை, Instagram Lite ஆப்ஸ் சுமார் பத்து கோடிக்கு மேல் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாவின் செய்து தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முக்கிய Instagram ஆப்ஸை மேலும் சிறப்பாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் பூமராங் மற்றும் ஹைப்பர்லேப்ஸ் ஆகியவற்றுக்கான தனி சப்போர்ட்டை அகற்றியுள்ளோம். இன்ஸ்டாகிராமில் மக்கள் ஆக்கப்பூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருக்க தேவைப்படும் புதிய வழிகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Instagram