Instagram: இன்ஸ்டாவில் இனி புகைப்படங்களை பகிரமுடியாது.. ஏன் தெரியுமா?

instagram

இன்ஸ்டாகிராம் தலைவராக இருக்கும் ஆடம் மொசோரி வெளியிட்டுள்ள பதிவில், இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் பகிரக்கூடிய தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை பகிரமுடியாது என தெரிவித்துள்ள அந்நிறுவனம், முழுமையான வீடியோ தளமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்றுவதாக கூறியுள்ளது.

டிக் டாக் தடைக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம், நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஷார்ட் வீடியோ ப்ளாட்பார்மில் முத்திரை பதித்திருக்கும் இன்ஸ்டாகிராம் செயலி விரைவில் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. இதற்கான முன்னறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் தலைவராக இருக்கும் ஆடம் மொசோரி வெளியிட்டுள்ள பதிவில், இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் பகிரக்கூடிய தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

பொழுபோக்கு சார்ந்த முழுமையான வீடியோ தளமாக இன்ஸ்டாகிராமை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் டெக்னாலஜி மூலம் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்த மொசோரி, 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து புதிய அப்டேட்டுகள் வரத்தொடங்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read:   'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

ஏற்கனவே ஷார்ட் வீடியோ தளங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் யூ டியூப் மற்றும் டிக் டாக் நிறுவனங்களுக்கு இணையாக இன்ஸ்டாகிராமை வளர்க்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

 



புதிய படைப்பாளர்கள், வீடியோ, ஷாப்பிங் மற்றும் மெசேஜ் என நான்கு தளங்களிலும் இன்ஸ்டாகிராம் செயலி மேம்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப செயலியின் கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக ஆடம் மொசோரி தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் வீடியோக்களை அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், அந்த டேட்டாவின் அடிப்படையில் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். ஆடம் மொசோரியின் இந்த அறிவிப்பு இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கு எந்தவித வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.

ஏனென்றால் அவர் கூறுவதற்கு முன்பே இன்ஸ்டாகிராம் தளத்தில் அதற்கான அப்டேட்டுகள் அண்மைக் காலங்களாக வரத் தொடங்கிவிட்டன. மேலும், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் யூசர்களில் பெரும்பான்மையானவர்கள் ஷார்ட் வீடியோ தளமாகவே அதனை பயன்படுத்துக்கின்றனர். முதலில் இன்ஸ்டாகிராம் தளம் ஐ.ஜி.டிவி மாடலில் செல்போன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு யூசர்களை சென்றடையாததால், ஷார்ட் வீடியோ தளமாக மாற்றினர். ரீல்ஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தி அதில் யூசர்கள் ஷார்ட் வீடியோக்களை பதிவேற்றலாம் என கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் யூசர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூடியூப் மற்றும் டிக்டாக் வீடியோ தளங்களுக்கு இணையாக வளர்ந்துள்ளது. முன்னணி நிறுவனங்களும் இன்ஸ்டாகிராமுக்காக ஷார்ட் வீடியோ பார்மேட்டில் விளம்பரங்களை தயாரிக்கின்றனர். இன்ஸ்டாகிராமின் அனைத்து முடிவுகளும் யூசர்களின் விருபத்தைப் பொறுத்தே இருக்கும் என கூறியுள்ள ஆடம் மொசோரி, புகைப்படங்கள் முழுமையாக நிறுத்தப்படுவது குறித்து யூசர்களின் கருத்துகளையும் ஆலோசிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: