Home /News /technology /

விரைவில் இன்ஸ்டாகிராமிற்கு வரும் 'பின் போஸ்ட்' அம்சம்! எப்படி வேலை செய்யும்? யாருக்கு என்ன பயன்?

விரைவில் இன்ஸ்டாகிராமிற்கு வரும் 'பின் போஸ்ட்' அம்சம்! எப்படி வேலை செய்யும்? யாருக்கு என்ன பயன்?

இன்ஸ்டாகிராமிற்கு வரும் 'பின் போஸ்ட்' அம்சம்

இன்ஸ்டாகிராமிற்கு வரும் 'பின் போஸ்ட்' அம்சம்

Instagram | டெக் க்ரன்ச் வழியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

    பிரபல சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம், தன் பிளாட்ஃபார்மில் சேர்ப்பதற்காக ஒரு புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது. அந்த அம்சம் யூசர்கள் தங்கள் ப்ரொஃபைல்களில் தாங்கள் விருப்பப்பட்ட போஸ்ட்-களை 'பின்' செய்து வைக்க அனுமதிக்கும். அதாவது உங்கள் 'கூகுள் கீப்' மெயின் ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள 'பின்' செய்யப்பட்ட நோட்ஸ்-களைப் போலவே, இன்ஸ்டாகிராமில் பின் செய்யப்படும் சில முக்கிய போஸ்ட்கள் மூலம், உங்கள் ப்ரொஃபைலை பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

    டெக் க்ரன்ச் வழியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. அந்த யூசர்கள் ட்விட்டரில் பின் செய்யப்பட்ட ட்வீட்கள் அல்லது டிக்டாக்கில் உள்ள வீடியோக்களைப் போலவே தங்கள் ப்ரொஃபைல்களில் போஸ்ட்களை பின் செய்யலாம். இந்த அம்சம் பல மாதங்களாக செயல்பாட்டில் இருப்பதாகவும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அம்சத்திற்கான அணுகல் உள்ளவர்கள், ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் 'த்ரீ டாட்ஸ் மெனு'வில் உள்ள 'பின் டூ யுவர் ப்ரொஃபைல்' (Pin to your profile) என்கிற விருப்பத்தைப் பார்ப்பார்கள். இதுகுறித்து மெட்டாவின் செய்தித் தொடர்பாளர், "நாங்கள் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறோம், இது யூசர்களின் ப்ரொஃபைலில் போஸ்ட்களை இடம்பெற அனுமதிக்கும்" என்று தெரிவித்து உள்ளார். நினைவூட்டும் வண்ணம், பிரபல ட்விட்டர் யூசர் ஆன அலெஸாண்ட்ரோ பலுஸி இந்த அம்சத்தை கடந்த ஜனவரியிலேயே கண்டறிந்தார், மேலும் இந்த 'பின்னிங்' விருப்பம் எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.

     

     



     

     

    'பின்' செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ஏன் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்?

    பின் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ஆனது, கிரியேட்டர்ஸ் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் தங்கள் ப்ரொஃபைல்களின் மேல் தங்களின் சிறந்த படைப்புகளை முன்னிலைப்படுத்த அனுமதிக்கும். இதனால் இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்கள் தங்களுக்குத் தேவையானதை கண்டுபிடிக்க பல போஸ்ட்களை ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக கலைஞர்கள் தங்களின் சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான படைப்புகளை காட்சிப்படுத்ததும் ஒரு 'போர்ட்ஃபோலியோவாக' இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

    ALSO READ |   திருமண அரங்கிற்கு தேவதை போல பறந்து வந்த மணப்பெண் - இது நம்ம லிஸ்டுலயே இல்லயே!
     ஆனால் இந்த அம்சம் அனைத்து இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கும் கிடைக்க நீண்ட காலம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ளது . எனவே இது ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வர இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். மேலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம், ஒரு புதிய அம்சத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முன்னர், குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அதை அறிமுகம் செய்யும் வழக்கத்தினை கொண்டுள்ளது.


    எனவே மேற்குறிப்பிட்ட அம்சத்தை பார்க்க இந்திய பயனர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அனைவருக்கும் இந்த அம்சம் எப்போது வரும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Instagram, Twitter

    அடுத்த செய்தி