இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் வாங்கிய லைக்ஸ்களை இனி பார்க்க முடியாது! காரணம் தெரியுமா?

தொடர்ந்து பிற நாடுகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று இன்ஸ்டாகிராமில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

news18
Updated: July 18, 2019, 3:54 PM IST
இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் வாங்கிய லைக்ஸ்களை இனி பார்க்க முடியாது! காரணம் தெரியுமா?
இன்ஸ்டாகிராம்
news18
Updated: July 18, 2019, 3:54 PM IST
பயனர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சோதனை முயற்சியாக சில நாடுகளில் மட்டும் மற்றவர்களின் லைக்ஸ்களை பார்க்க முடியாத வகையில் இன்ஸ்டாகிராம் மறைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்ஸ்டாகிராம், மற்றவர்களின் புகைப்பட லைக்ஸ்களை பார்க்க முடியாத வகையில் மறைத்துள்ளது.

அதாவது ஒரு நபர் பதிவிடும் வீடியோ அல்லது புகைப்படத்திற்கு எவ்வளவு லைக் உள்ளது, எவ்வளவு நபர்கள் பார்த்துள்ளார்கள் என்ற விவரங்களை இரண்டாம் நபர் யாருக்கும் தெரியாது.


சமுக வலைத் தளங்களில் ஒரு படம் அல்லது வீடியோவை பதிவேற்றிய பிறகு அதற்கு எவ்வளவு லைக் வந்தது, என்ன கமெண்ட் வந்தது என்ற போட்டிகள் வருகிறது. அதனால் சமுக வலைத்தள பயனர்கள் பணம் கொடுத்து லைக்குகளைப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் தீவிர மன சோர்வுக்கு ஆளாகின்றனர்.

இவற்றைக் குறைக்கவே இன்ஸ்டாகிராம் இந்த முடிவை எடுத்துள்ளாத கூறியுள்ளது. முதலாவதாக இந்த லைக் ஆப்ஷனை மறைக்கும் முடிவை இன்ஸ்டாகிராம் கனடாவில் சோதனை செய்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா, பிரேசில், ஐர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அதில் இணைந்துள்ளன.

தொடர்ந்து பிற நாடுகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று இன்ஸ்டாகிராமில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Loading...

இது ஒரு சோதனை முயற்சி, இதன் மூலம் தங்களது பயனர்களின் அனுபவத்தை ஆய்வு செய்து வருகிறோம் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...