இன்ஸ்டாகிராமில் மெசெஜ் செய்ய ஈமோஜிக்கள் அறிமுகம்... பயனாளர்கள் வரவேற்பு

தற்போது ஈமோஜி அம்சம் குறித்த சோதனை முயற்சியில் இன்ஸ்டா ஈடுபட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மெசெஜ் செய்ய ஈமோஜிக்கள் அறிமுகம்... பயனாளர்கள் வரவேற்பு
Instagram
  • News18
  • Last Updated: February 4, 2020, 3:27 PM IST
  • Share this:
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைரக்ட் மெசேஞ் செய்ய இனி ஈமோஜிக்களைப் பயன்படுத்தலாம்.

போட்டோ ஷேரிங் ஆப் என்றழைக்கப்படும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புதிய ஈமோஜி அம்சம் வெளியீட்டுக்கு முன்னரே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கான அனுமதியை ஃபேஸ்புக் நிர்வாகம் வழங்கியிருப்பதால் தற்போது ஈமோஜி அம்சம் குறித்த சோதனை முயற்சியில் இன்ஸ்டா ஈடுபட்டு வருகிறது.இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பொறியாளர் ஜேன் மஞ்சூன் கூறுகையில், “கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இன்ஸ்டாவில் DM செய்யும்போது ரியாக்‌ஷன்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என முயற்சித்து வருகிறோம். தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளோம். விரைவில் தவறுகள் சரி செய்யப்பட்டு வெளியீட்டுக்கு வரும்” என்றார்.

மேலும் பார்க்க: பிப்ரவரி 1-ம் தேதி முதல் ’இந்த’ ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்