சமீப காலமாக உலக அளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் தான் உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள செயலியாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக அதே மெட்டா நிறுவனத்தின் மற்றொரு பிரபல செயலியான இன்ஸ்டாகிராம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் அதன் வசதிகள் யூசர்களுக்கு இதன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மேலும் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரம் அல்லது பிரபலத்தை பின் தொடரவும் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் பல வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மெட்டா நிறுவனமானது அவ்வபோது இன்ஸ்டாகிராமிற்கு புதிய வசதிகளை சேர்த்து, புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தான் “கொயட் மோட் (Quiet mode)” எனப்படும் புதிய வசதியை இந்த முறை அறிமுகப்படுத்தி உள்ளது.
Also Read : இந்தியர்களின் மனங்களை வென்ற ஸ்மார்ட்போன் இதுதான்! - காரணம் தெரியுமா?
இந்த 'Quiet Mode'-ஐ ஆன் செய்து வைத்து விட்டால், தங்களுடைய நண்பர்கள் மற்றும் ஃபாலோவர்களிடமிருந்து வரும் அதிகப்படியான நோட்டிபிகேஷன் மறைக்கப்பட்டு விடும். இதனால் தேவையற்ற நேரங்களில் நமது கவனம் சிதறாமல் நம்மால் இருந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு 'Quiet Mode'-ஐ ஆக்டிவேட் செய்து உள்ளீர்கள் என்பதை பற்றி அவர்களுக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷனும் செல்லாது. ஒருவேளை உங்களுக்கு யாரேனும் மெசேஜ் செய்தால் கூட அவர்களுக்கு ஆட்டோமேட்டிக் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டு விடும்.
தற்போது யுஎஸ், யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி முதல் இந்த 'Quiet Mode' வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற உலக நாடுகளில் மிக விரைவாக இந்த வசதியானது பயன்பாட்டிற்கு வரும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இதை தவிர மற்றும் பல புதிய வசதிகளையும் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது நீங்கள் என்ன விதமான போஸ்ட்களை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஒரு போஸ்ட் பிடிக்கவில்லை எனில் தாராளமாக நீங்கள் அதனை இனி காண்பிக்க வேண்டாம் என்று ஆப்ஷனை தேர்வு செய்து நீக்கிவிடலாம். அதன் பின் அது போன்ற போஸ்ட் உங்களுக்கு காண்பிக்கப்படாது. அதுபோலவே கமெண்ட்கள், ஹேஷ்டேக்குகள் போன்றவற்றையும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களது டைம் லைனில் தோன்றாத வண்ணம் நீங்கள் அவற்றை நீக்க முடியும். இதற்கான தேர்வை உங்களது பிரைவசி செட்டிங்கில் சென்று ஹிடன் வேர்ட்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் செட்டிங் பார்க்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. ஒருவேளை அவர்களது குழந்தைகள் ஏதேனும் செட்டிங்கை மாற்றினால் அதற்கான நோட்டிபிகேஷன் அவர்களது பெற்றோருக்கு செல்லும். இதுவும் பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.