ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

போன வாரம் வாட்ஸ்அப்.. இந்த வாரம் இன்ஸ்டா.! தடுமாறும் மெட்டா.. என்ன காரணம்?

போன வாரம் வாட்ஸ்அப்.. இந்த வாரம் இன்ஸ்டா.! தடுமாறும் மெட்டா.. என்ன காரணம்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த வாரம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சில மணிநேரங்கள் செயல்படாமல் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான யூஸர்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டா மற்றும் பிரபல மெசேஜிங் சர்விஸ் ஆப்-ஆன வாட்ஸ்அப் உள்ளிட்டவை மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானவையாக இருக்கின்றன.

  கடந்த வாரம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சில மணிநேரங்கள் செயல்படாமல் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான யூஸர்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியாமல் தவித்தனர். சில மணி நேரங்களில் சிக்கல் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட துவங்கியது. இந்நிலையில் மெட்டாவுக்கு சொந்தமான மற்றொரு பிரபல சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் நேற்று உலகின் பலநாடுகளில் சில மணி நேரங்கள் செயல்படாமல் செயலிழந்தது.

  இளைஞர்களிடையே மிக பிரபலமாக உள்ள இன்ஸ்டாகிராம் உலகளவில் திடீரென முடங்கியதால் அதிர்ச்சி அடைந்த யூஸர்கள், சிக்கல் இருப்பது தெரியாமல் தங்கள் இன்ஸ்டா அக்கவுண்ட் காரணமே இல்லாமல் முடக்கப்பட்டிருக்கிறது என்று ட்விட்டர் உள்ளிட்ட பிற சோஷியல் மீடியாக்கள் மூலம் புகார் தெரிவித்தனர். சில நிமிடங்களுக்கு முன்னால் பயன்படுத்தி கொண்டிருந்த இன்ஸ்டாவை, சில மணி நேரங்களாக பயன்படுத்தவே முடியவில்லை என்று லட்சக்கணக்கான யூஸர்கள் பிற சோஷியல் மீடியாக்கள் மூலம் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

  Read More : முதல் ட்விட் செய்தவர் இவர்தான்- ட்விட்டர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

  எண்ணற்ற இன்ஸ்டா யூஸர்கள் தங்கள் அக்கவுண்டில் உள்நுழைவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். இன்ஸ்டாவை அக்சஸ் செய்ய முயன்ற போது சர்வர் எரர் காட்டியதாக இன்ஸ்டா யூஸர்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பல்வேறு இணையதளங்கள் மற்றும் சேவைகளின் நிலையை பற்றிய நிகழ்நேர தகவலை யூஸர்களுக்கு வழங்கும் Downdetector ஆன்லைன் பிளாட்ஃபார்மில் இன்ஸ்டாவில் ஏற்பட்ட சிக்கல் குறித்து ஆயிரக்கணக்கான ரிப்போர்ட்கள் பதிவாகின.

  மேலும் பல யூஸர்கள் தங்கள் அக்கவுண்ட்டை பயன்படுத்த முனைந்த போது community norms-களை பின்பற்ற தவறியதால் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவலை பெற்றுள்ளனர். யூஸர்கள் தங்களுக்கு வந்த சஸ்பெண்ட் தொடர்பான நோட்டிஃபிகேஷன்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பிற சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்தனர். யூஸர்களின் தொடர்ச்சியான புகார்கள் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் ஒரு சலசலப்பை உருவாக்கியது.

  உலகம் முழுவதும் உள்ள பல யூஸர்களின் இன்ஸ்டா அக்கவுண்ட் லாக் ஆனதும், சஸ்பெண்ட் செய்யப்படதாக டிஸ்ப்ளே மெசேஜ் காட்டியது தொடர்பான புகார்கள் வைரலானது. இன்ஸ்டாவில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பான ட்விட்கள், போஸ்ட்கள் மற்றும் Tags-கள் பிற சோஷியல் மீடியாக்களில் வைரலான நிலையில், உடனடியாக சிக்கல் குறித்து ட்விட் செய்தது இன்ஸ்டா. அதில் "உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டா அக்கவுண்ட்டை தொடர்ந்து அணுகுவதில் சிக்கல் இருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த கோளாறு தொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் சிக்கல் சரி செய்யப்படும்" என்று கூறி இருந்தது.

  இதற்கு காரணம் தொழில்நுட்ப சிக்கல் என்றும், அக்கவுண்ட்ஸ்களை பெருமளவில் தடை செய்ய தங்கள் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தது. பின்னர் சொன்னபடி சில மணி நேரங்களில் இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து யூஸர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது இன்ஸ்டா. ஒரு வாரத்திற்குள் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டா என இரண்டும் அடுத்தடுத்து சிலமணி நேரங்கள் செயலிழந்தது மெட்டா நிறுவனத்தின் மீது யூஸர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Instagram, Technology