• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இன்ஸ்டாகிராம் சேவை திடீரென முடக்கம் - ஆப்பை ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டுமா?

இன்ஸ்டாகிராம் சேவை திடீரென முடக்கம் - ஆப்பை ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டுமா?

Instagram down

Instagram down

இன்று காலை 11.02 மணியளவுக்கு சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியது.

  • Share this:
இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று திடீரென முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம், உலக நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளம் ஆகும். இந்தியாவில் பெருமளவில் இஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இரண்டு வகை டிவைஸ்களிலும் இன்ஸ்டா முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பலருக்கும் இன்ஸ்டா ஆப் லோட் ஆகவில்லை.

இன்ஸ்டா பயன்பாட்டாளர்கள் பலருக்கும் திடிரென ஆப்பில் கோளாறு ஏற்பட்டதால் எனக்கு மட்டும் தான் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் இன்ஸ்டா முடக்கம் குறித்து கேள்வி எழுப்பி தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 11.02 மணியளவுக்கு சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக டவுன் டிடக்டர் எனப்படும் இணையதளங்களை கண்காணித்து வரும் வலைத்தளம் கூறியுள்ளது. சுமார் 45 சதவீதத்தினர் தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலியில் லோட் ஆகவில்லை எனவும், 33 சதவீதத்தினர் வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் லோட் ஆகவில்லை எனவும் மிச்சமுள்ள 22 சதவீதத்தினர் சர்வர் இணைப்பில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக காட்டுவதாகவும் புகார்கள் கூறியிருப்பதாக டவுன் டிடக்டர் தெரிவித்திருக்கிறது.

Also Read:  சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வானப்படுத்தி சாம்பல் பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

தங்களிடம் மட்டுமே சுமார் 1000 பயனாளர்கள் இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து தகவல் தெரிவித்திருப்பதாகவும் டவுன் டிடக்டர் கூறியிருக்கிறது.



இன்ஸ்டாகிராம் தனது சர்வர்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்கிறது என்ற போதிலும் வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் நல்ல நிலையிலேயே இயங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம் தரப்பில் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.



இன்ஸ்டா ஆப் வேலை செய்யவில்லை என்பதற்காக அந்த ஆப்பை நீக்கிவிட்டு மீண்டும் ரீஇன்ஸ்டால் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும். இன்ஸ்டா தரப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால் அந்த கோளாறு சரியான பிறகு உங்கள் மொபைல்களில் இருக்கும் இன்ஸ்டா செயலி வழக்கம் போல இயங்கத் தொடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: