ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு இன்ஸ்டாகிராம் ரூ.38 லட்சத்தை பரிசாக வழங்கி கெளரவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India

சோசியல் மீடியா, பணப்பரிமாற்ற ஆப்கள், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பிரபல மென்பொருள் நிறுவனங்கள் என்னதான் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், ஹேக்கர்கள் தகவல்களை திருடுவதற்கான தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் கோளாறுகளைச் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அள்ளிக் கொடுத்து வருகின்றன.

தற்போது இந்தியாவைச் சேர்ந்த மாணவனுக்கு இன்ஸ்டாகிராம் லட்சக்கணக்கில் பரிசளித்துள்ள சோசியல் மீடியாவில் வைரல் செய்தியாக மாறியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் நீரஜ் சர்மா, கோடிக்கணக்கான மக்களின் தகவல்கள் ஹேக் செய்யாமல் காப்பாற்றியதற்காக இன்ஸ்டாகிராமில் அவருக்கு 38 லட்சம் ரூபாயை பரிசாக அளித்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்த தொழில்நுட்ப குளறுபடிகளை கண்டறிந்ததற்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் யூஸரின் ரீல்ஸ் "தம்ப்நெயில்"-யை (Thumbnail) அவரது பாஸ்வேர்ட் மற்றும் ஐடி இல்லாமலேயே ஹேக் செய்து யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற தொழில்நுட்ப குறைபாடு இருப்பதை நிரஜ் சர்மா கண்டறிந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு தகவல் அனுப்பியுள்ளார். சர்மா அளித்த தகவல் உண்மையானது என்பதைக் கண்டறிந்த இன்ஸ்டாகிராம் நிறுவனம், அவரது சேவையை பாராட்டும் விதமாக 38 லட்சம் ரூபாயை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது.

இதுகுறித்து நிரஜ் சர்மா கூறுகையில், “பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை இருந்தது, அதன் மூலம் ரீலின் தம்ப்நெயில் படத்தை யார் வேண்டுமானாலும் மாற்றலாம். கணக்கு வைத்திருப்பவரின் கடவுச்சொல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதை மாற்ற அக்கவுண்டின் ஐடி மட்டும் இருந்தால் போதும்” என தெரிவித்துள்ளார்.

Read More: மாற்றுத்திறனாளிக்கு இஸ்ரோ வடிவமைத்த செயற்கை ’ஸ்மார்ட்’ கால் மூட்டுகள்... இதில் அப்படி என்ன ஸ்பெஷல்!

இந்த தொழில்நுட்ப குறைப்பாட்டை கடந்த டிசம்பர் மாதம் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சர்மா கண்டறிந்துள்ளார். அதன் பின்னர் ஜனவரி 31ம் தேதி இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 3 நாட்கள் கழித்து, தொழில்நுட்ப குறைப்பாட்டை நிரூபிக்கும் டெமோவை அனுப்பும் படி இன்ஸ்டாகிராம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் சர்மாவின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மெட்டா நிறுவனம் அவருக்கு பரிசாக 45 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாயையும், வெகுமதி அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக 4500 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்தையும் சேர்த்து 38 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது.

தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிபவர்களுக்கு அந்த நிறுவனம் பரிசுத் தொகை வழங்குவதற்கு, பக் பவுண்டி என்று பெயர். இதனை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் இது போன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன.

சமீபத்தில் கூட கூகுள் நிறுவனம் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் பாதிப்பு வெகுமதிகள் திட்டத்தை அறிவித்தது. அதன் படி தவறுகளைச் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு அதன் தீவிரத்தை பொறுத்து 25 லட்சம் வரை பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Srilekha A
First published:

Tags: Facebook, Google, Instagram, Social media