முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்விட்டரை போல் பேஸ்புக், இன்ஸ்டாவிலும் ப்ளூ டிக் பெற கட்டணம்.. பயனர்கள் அதிர்ச்சி..!

ட்விட்டரை போல் பேஸ்புக், இன்ஸ்டாவிலும் ப்ளூ டிக் பெற கட்டணம்.. பயனர்கள் அதிர்ச்சி..!

மாதிரி படம்

மாதிரி படம்

Facebook Instagram Bluetick Verified Account Payment | இந்த நடைமுறை இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைமுறைக்கு வர உள்ளதாக மெட்டா அறிவிப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, Indiausausausa

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்குகளை அங்கீகரிப்பதற்காக மாதாந்திர கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டரில் கணக்கை அங்கீகரிப்பதற்கான நீல வண்ண குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11 டாலர் கட்டணம் செலுத்தும் முறையை கடந்த நவம்பர் மாதத்தில் அதன் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலிலும் கட்டணம் செலுத்தி நீல வண்ண அடையாளத்தை பெறும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இதற்கான மாதக் கட்டணமாக, வலைதளங்களில் பயன்படுத்த 11.99 டாலர்களும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் 14.99 டாலர்களும் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நடைமுறை இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைமுறைக்கு வர உள்ளது.

மற்ற நாடுகளில் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவோரின் பதிவுகள் பார்ப்பதற்கு தெளிவாக இருப்பதுடன், ஆள்மாறாட்டம் ஏற்படாமல் தடுக்கும் என்றும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. இதையொட்டி, அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள ஆவணங்களில் இருப்பதைப் போன்றே, பயன்பாட்டாளர்களின் பெயரையும் உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Facebook, Instagram, Mark zuckerberg, Meta