Home /News /technology /

50MP கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான Infinix Note 12 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

50MP கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான Infinix Note 12 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Infinix Note 12 series smartphones launched in India

Infinix Note 12 series smartphones launched in India

Infinix Note 12 மொபைல் மொத்தம் 2 ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் வருகிறது...

நோட் 11 சீரிஸை தொடர்ந்து நோட் 12 சீரிஸை (Infinix Note 12 series) இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் தனது Note 12 series-ஐ 2 புதிய மொபைல்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது Infinix நிறுவனம். இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிஸில் Infinix Note 12 மற்றும் Infinix Note 12 Turbo ஆகிய 2 ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த மிட்-ரேஞ்ச் மொபைல்கள் மீடியாடெக் ஹீலியோ சிப்செட்களை கொண்டுள்ளன.

மேலும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் அதிக கெப்பாசிட்டி பேட்டரியை கொண்டுள்ளன. மேலும் இவை எக்ஸ்டென்டபிள் ரேம் சப்போர்ட்டுடன் வருகின்றன. யூஸர்களுக்கு ரேமை 11GB வரை விரிவாக்குவதற்கான விருப்பத்தை இன்ஃபினிக்ஸ் வழங்குகிறது. தவிர DTS சரவுண்ட் சவுண்ட் குவாலிட்டியை வழங்கும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் இந்த மொபைல்களில் சேர்த்துள்ளது.

இந்தியாவில் Infinix Note 12 மற்றும் Note 12 Turbo மொபைல்களின் விலைகள்...

Infinix Note 12 மொபைல் மொத்தம் 2 ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் வருகிறது. 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.11,999 ஆகும். 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.12,999 ஆகும். அதே நேரம் Note 12 Turbo மொபைலில் ஒரே வேரியன்ட் மட்டுமே கிடைக்கும். 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.14,999. விற்பனைக்கு வரும் நேரத்தில் சிறப்பு வங்கி தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மொபைல்களும் வரும் மே 27 (Note 12) மற்றும் மே 28 (Note 12 Turbo) ஆகிய தேதிகளில் Flipkart-ல் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Infinix Note 12-ன் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இந்த மொபைலானது 1000 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சேம்பிளிங்குடன் 6.7” FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஃபோன் சைட் மவுண்ட்டட்ட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளது. இந்த மொபைல் MediaTek Helio G88 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஜூவல் ப்ளூ, ஃபோர்ஸ் பிளாக், சன்செட் கோல்ட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கும். கேமராக்களை பொறுத்தவரை பின்பக்கம் AI சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட 50MP பிரைமரி சென்சார் உள்ளது. முன்பக்கம் செல்ஃபிக்களுக்காக 16MP கேமரா உள்ளது. ஃபோன் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Infinix Note 12 Turbo-வின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

Infinix Note 12 Turbo மொபைலும் 1000 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சேம்பிளிங்குடன் 6.7” FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதிலும் சைட் மவுண்ட்டட்ட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 4G சிப்பான MediaTek Helio G96 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. Note 12 மொபைலை போலவே 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் AI சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது. முன்புறம் 16 மெகாபிக்சல் ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோன் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

Also see... உங்கள் ஃபோன் டேட்டாவை எவ்வாறு சேமிக்கலாம் தெரிந்துகொள்ளுங்கள்.!

ப்ராசஸரை தவிர Note 12 மற்றும் Note 12 Turbo ஆகிய 2 மொபைல்களுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முறையே Android 11 (Note 12) மற்றும் Android 12-bases XOS 10.6 (Note 12 Turbo) UI உடன் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

அடுத்த செய்தி