ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளமும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளமும் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் முக்கிய இடத்தை இவை பிடித்துள்ளன . முக்கியமாக கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மிக பெரியை அளவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
குறிப்பாக நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிட் ரேன்ஜ் மற்றும் பேசிக் மாடல் ஸ்மார்ட்போன்களில் கூட கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் அதிகம் பயன்படுத்தபடுகிறது. ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளம் கூகுளுக்கு அடுத்த நிலையில் தனக்கான பெரிய சந்தையை கொண்டுள்ளது. தற்போது இந்த இரண்டு இயங்குதளங்களுக்கும் போட்டியாக, இந்திய அரசாங்கம் ஐஎன் டி ஓ எஸ் என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. அனைத்து வித மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. மொபைல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பல்வேறு வேலைகளும் இந்தியாவில் மிக அதிக அளவில் நடைபெறின்றன. இதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் ஐஎன்டி இயங்குதளம் மிகப்பெரும் போட்டியை உண்டாக்கி இந்திய சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும்என பல நம்புகின்றனர்.
கூகுலானது இந்திய அரசாங்கத்தால் ஏற்கனவே கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய கூகுளின் சில நடவடிக்கைகளினாலும், கூகுள் பிளே ஸ்டோரில் அவர்களின் கொள்கைகளினாலும் இந்திய அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றம் இந்தியாவின் கூகுளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அதன் நம்பகத்தன்மையை பற்றி ஆராயவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஆல்பா இன்க் என்ற கூகுளுக்கு சொந்தமான நிறுவனம் கூகுளை பயன்படுத்தி சில ஏமாற்று வேலைகளை செய்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்த ஆப்புகளைப் பற்றி மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்நிறுவனம் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் கொள்கைகளை மாற்றவும், புதிய உரிமங்களை பெறுவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்கவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆப் டெவலப்பர்களுக்கானகளுக்கான ஒப்பந்தங்களை உருவாக்கும் வேலையை கூகுள் செய்து கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் ஐஎன்டி ஓஎஸ் சந்தைக்கு வரும் பட்சத்தில் நல்லதொரு போட்டியாக இருக்கும் எனவும் பலர் நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Android, Apple IOS, Automobile