ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ட்விட்டரில் இருந்து வெளியேறியவரா நீங்க...வாங்க வேலை இங்க தரோம்... "கூ"வின் புது யுக்தி!

ட்விட்டரில் இருந்து வெளியேறியவரா நீங்க...வாங்க வேலை இங்க தரோம்... "கூ"வின் புது யுக்தி!

"கூ" ஆட்சேர்ப்பு

"கூ" ஆட்சேர்ப்பு

கூவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அப்ரமேயா ராதாகிருஷ்ணா, கூ விரைவில் அமெரிக்காவில் தொடங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து தினம் தினம் ஒரு தலைப்பு செய்தி வந்த வண்ணம் உள்ளது. நிறுவனத்தை கையில் எடுத்த சில நாட்களிலேயே ஆட்குறைப்பு பணி நடைபெற்றது. இந்தியர்கள் பலர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இப்போது, ​​ட்விட்டரின் இந்திய போட்டியாளரான "கூ", இந்தச் சூழலை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் பயன்பாட்டை விரிவுபடுத்த முயற்சித்துள்ளது. ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்களை கூ-இல் பணியமர்த்தும் நோக்கத்துடன் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கூவின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா, கூவிற்கான புதிய ஆட்சேர்ப்பு விவரங்களை பகிர்ந்து வருகிறார்.

பணியமர்த்தல் திட்டங்களை அறிவிக்க பிடவட்கா ட்விட்டரில் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார் . அதில், “#RIPTwitter என்று பரவி வரும் கருத்துக்களை பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களில் சிலரை நாங்கள் பணியமர்த்த தயாராக உள்ளோம். அவர்களின் திறமைக்கு மதிப்பளிக்கும் இடமாக எங்கள் நிறுவனம் அமையும். இவர்களை கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் கூ செயலி மேம்படுத்தப்பட்ட அடுத்த தரத்தை எட்டும் என்றார். மேலும் மைக்ரோ பிளாக்கிங் என்பது மக்கள் சக்தியைப் பற்றியது. அடக்குமுறை பற்றியது அல்ல, ”என்று அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: WATCH: சூரியனில் நெளியும் மர்ம சூரியப் பாம்பு... விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

உள்நாட்டு மைக்ரோ பிளாக்கிங் தளமான கூ உலகளாவிய ரீதியில் செல்ல தயாராக உள்ளது. இந்த வார தொடக்கத்தில், கூவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அப்ரமேயா ராதாகிருஷ்ணா, கூ விரைவில் அமெரிக்காவில் தொடங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். கூடுதலாக, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் ட்விட்டர் போட்டியாளராக கூ காலத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது.

கூ 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் நிறுவனம் 50 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியதை உறுதிப்படுத்தியது கூ செயலி தற்போது இந்தி, கன்னடம், மராத்தி, பங்களா, தமிழ், தெலுங்கு மற்றும் குஜராத்தி உட்பட நாட்டின் 10 பிராந்திய மொழிகளில் இயங்குகிறது.

ட்விட்டர் இப்போது சந்தித்து வரும் பெறும் பின்னடைவுகளை, கூ முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, ட்விட்டருக்கான சிறந்த மாற்றாக தன்னைத்தானே முன்வைத்து வருகிறது. அதன் ஒரு தந்திர யுத்தியாக ட்விட்டரில் இருந்து வெளியேறும் பணியாளர்களுக்கு கூ வாய்ப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Elon Musk, Twitter