கொரோனா இரண்டாம் அலை காலத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 13% குறைந்தது: சர்வே ரிப்போர்ட்!

ஸ்மார்ட்போன்

ஆன்லைன் ஸ்மார்ட்போன்கள் கொள்முதல் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது ஒரு வருடத்திற்கு விற்பனை 87 சதவீதம் உயர உதவியது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா எனும் கொடிய நோயால் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் திசைதிரும்பி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அதேபோல, பல விஷயங்கள் ஆன்லைன் நடைமுறைக்கு மாறியது. இருப்பினும் இந்த கொரோனா காலத்தில் பொருட்களின் உற்பத்தி என்பது அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், வாகன உற்பத்தி இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டன.

அதேபோல, ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பினால், விற்பனை குறைந்திருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை உலகின் நம்பர் 2 ஸ்மார்ட்போன் சந்தையின் உற்பத்தி மற்றும் விற்பனை தேவைகளை பாதித்துள்ளதால், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் சரிந்துள்ளது என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், ஆன்லைன் ஸ்மார்ட்போன்கள் கொள்முதல் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது ஒரு வருடத்திற்கு விற்பனை 87 சதவீதம் உயர உதவியது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து கேனலிஸ் ஆய்வாளர் சன்யம் சவுராசியா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையுடன் நின்று விடும் திரும்பி வராது என்று கருதினர். மேலும் பலர் பிராண்டட் கடைகளுக்கான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டனர் மற்றும் மூன்றாம் தரப்பு ஆஃப்லைன் சேனல்களுடன் கூட்டாண்மை செய்தனர்.

ஆனால் மீண்டும் அவர்கள் ஒரு ஆன்லைன் மூலோபாயத்திற்கு விரைவாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ”என்று எழுதியிருந்தார். மேலும், அறிக்கையின்படி சீனாவின் ஷியாமி 29 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருக்கிறது. இது இந்திய வாடிக்கையார்களால் விரும்பப்படும் சிறந்த பிராண்டாகத் தொடர்ந்தது. தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 17 சதவீத பங்கைக் கொண்டுள்ளது என்று கேனலிஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பதாலும், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாலும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நாடு மீண்டும் ஸ்மார்ட்போன் வர்த்தக முன்னேற்றத்தை அடையும் என்று சவுராசியா கணித்துள்ளார்.

Also read... புதிய கேமரா சிஸ்டம்... ஜெட் ஸ்பீட் சார்ஜிங்... One Plus Nord 2-வில் இத்தனை அம்சங்களா?

கொரோனா நோய்த்தொற்றுகளின் மூன்றாவது அலை அச்சுறுத்தல் இந்தியாவில் இன்னும் வளர்ந்து வருவதால், வாடிக்கையாளர் நடத்தை மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளை இப்போதைய நெருக்கடிக்கு இணங்க சரிசெய்தால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,342 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3,12,93,062 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 38,740 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,04,68,079 ஆக உயர்ந்தது. இன்று வெளியான புள்ளிவிவரங்களின் நிலவரப்படி 4,05,513 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: