ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

செவ்வாய் சுற்றுப்பாதை பயணத்தில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்த 'மங்கள்யான்'!

செவ்வாய் சுற்றுப்பாதை பயணத்தில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்த 'மங்கள்யான்'!

மங்கள்யான்

மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை கொண்டு அதை ஆராய நவம்பர் 5, 2013 இல் ஏவப்பட்டது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் அதன் சுற்றுப்பாதை பயணத்தில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. திட்டமிட்ட காலத்தை விட 6 மாதங்கள் அதிகம் செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) தேசிய விண்வெளி நிறுவனமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) கிரகங்களுக்கு இடையிலான முதல் செயற்கைகோளாகும்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை கொண்டு அதை ஆராய நவம்பர் 5, 2013 இல் ஏவப்பட்ட இந்த விண்கலம், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது. செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

சமீபத்திய திட்டங்களைக் குறிக்கும் வகையில், இஸ்ரோ, செவ்வாய்கிழமையன்று, அதன் தலைமையகத்தில், அதன் தலைவர் எஸ் சோமநாத் தலைமையில், 'இந்தியாவின் செவ்வாய் சுற்றுப்பாதை பயணத்தின் (MOM) எட்டு ஆண்டுகளுக்கான தேசிய சந்திப்பை' ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரோவின் அப்போதைய தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், MOM (மங்கள்யான்) மிஷன் குழுவை வழிநடத்தினார்

இனி பெரிய கட்டிடங்களையும் ’பறக்கும் ட்ரோன் 3D பிரிண்டர்’ மூலம் கட்டலாம்.. வருகிறது தேனீயிடம் கற்ற டெக்னாலஜி

விண்வெளி கமிஷன் உறுப்பினர்கள் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.எஸ்.கிரண் குமார் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு உரைகளை ஆற்றுவார்கள். இதில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையின் கண்ணோட்டம், அறிவியல் சாதனைகள் மற்றும் உள் சூரிய மண்டலத்தின் ஆய்வில் எதிர்கால திசைகள் ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும்.

ISRO 2016 இல் எதிர்கால செவ்வாய் சுற்றுப்பாதை பணிக்கான (MOM-2) 'வாய்ப்பு அறிவிப்பை' (AO) வெளியிட்டது. ஆனால் அது இன்னும் காகித திட்டங்களாகவே இருக்கின்றன. அடுத்தடுத்து 'ககன்யான்', 'சந்திராயன்-3' மற்றும் சூரியனை ஆராயும் 'ஆதித்யா - L1' திட்டங்கள் விண்வெளி ஏஜென்சியின் தற்போதைய முன்னுரிமை பட்டியலில் உள்ளது. இவற்றை முடித்த பின்னர்தான் செவ்வாய் கிரகத்திற்கான செயல்பாடுகள் குறித்து திட்டமிட முடியும் என்று இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரோ வெளியிட்ட வாய்ப்பு பற்றிய அறிவிப்பு , எதிர்கால ஏவுதல் வாய்ப்பிற்காக செவ்வாய் கிரகத்தைச் சுற்றி அடுத்த சுற்றுப்பாதைப் பயணத்தை மேற்கொள்ள இப்போது திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள ஆர்பிட்டர் மிஷனில் (MOM-2) பரிசோதனைக்காக இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ள விஞ்ஞானிகளிடமிருந்து தொடர்புடைய அறிவியல் சிக்கல்கள், தலைப்புகள், பரிந்துரைகள் கோருவதாக அறிவித்துள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: ISRO, MARS