Home /News /technology /

இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் உலகம் இதை சார்ந்து தான் உள்ளது!

இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் உலகம் இதை சார்ந்து தான் உள்ளது!

காட்சி படம்

காட்சி படம்

5G Technology | வெளிநாடுகளில் இருப்பது போல டிஜிட்டல் பயன்பாடுகள் இந்தியாவில் விரைவில் காணப்படும்.

தொழில்நுட்ப உலகில் ஏகப்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி பலருக்கும் பலவிதமான சிந்தனைகள் உள்ளன. இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த நிலையில் எந்த விதமான தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வெளிநாடுகளில் இருப்பது போல டிஜிட்டல் பயன்பாடுகள் இந்தியாவில் விரைவில் காணப்படும்.

மெடாவெர்ஸ் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் சார்ந்து தான் அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2002-23 ஆம் ஆண்டுக்கான 5ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும்  எலெக்ட்ரானிக், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான  அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் “இந்தியா தனக்கு சொந்தமான 4ஜி கோர் மற்றும் ரேடியோ நெட்வொர்கை ஏற்கனவே டெவலப் செய்துள்ளது மற்றும் 5ஜி நெட்வொர்க்குக்கும் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த அறிவிப்புகள் அனைத்துமே இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதுமே, மெடாவெர்ஸ் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில்தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 5ஜி மற்றும் மெடாவெர்ஸ் ஆகிய இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!

டெக்னாலஜி ஸ்கேலிங்கின் அடிப்படையில் 5ஜி மற்றும் மெடாவெர்ஸ் ஆகிய இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. டிஜிட்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் பரவலாக விநியோகிக்கப் படும் கிளவுட் ஆர்க்கிடெக்சர் ஆகியவை சரியான முறையில் ஸ்கேல் செய்யப் பட வேண்டும். உதாரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட திரைகளுடன் ஒரு மல்டிபிளக்ஸ் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்ற ரீதியில்தான் திரைப்படங்கள் வெளியாகிறது.



அல்லது ஒரு வாரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் போது, சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள் மட்டும் இருக்கிறது என்றால், சரியான அளவில் மக்களை சென்றடையாது. நாட்டில் அதி நவீன தொழில்நுட்பம் இயங்கும் அளவுக்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்; அவ்வாறான ஒத்துழைப்பு இல்லை என்றால் புதிதாக எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் பயனில்லாமல் போகும். இந்த அடிப்படையில் மெடாவெர்ஸ் மற்றும் 5ஜி ஆகிய இரண்டுமே ஒன்றையொன்று ஆதரித்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்.

also read : இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள Realme 9 4G மொபைல் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் மெடாவெர்ஸ் ஆகிய இரண்டுமே சரியான அளவில் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவை இந்தியாவின் முக்கிய தேவையாகவும் காணப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் தான் 5ஜி தேவை என்பது பரவலாக கூறப்பட்டாலும், இந்த தொழில்நுட்பத்தின் அதி நுட்பமான நெட்வொர்க் கெப்பாசிட்டி மற்றும் அதிவேக டேட்டா ஆகிய இரண்டுமே இந்தியாவுக்கு அத்தியாவசியம். அதுமட்டுமின்றி இந்திய மக்கள் தொகைக்கு மற்றும் இணையம் பயன்படுத்தும் எண்ணிக்கைக்கு இது மிகவும் அவசியம்.



 

மெடாவெர்ஸ் என்று வரும்பொழுது, அதை பயன்படுத்தி இந்தியாவில் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கும் சாத்தியம் ஏராளமாக இருக்கின்றது. இந்திய சந்தையில், இந்தியாவின் கலாச்சாரத்துக்கு என்றே மெடாவெர்ஸ் பல்வேறு கூறுகளை வைத்திருக்கிறது. உதாரணமாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்ட் ரியாலிட்டி, அவதார், கட்டமைக்கப்பட்ட விர்ச்சுவல் சந்தைகள் ஆகிய என்ற அனைத்துமே இந்தியாவின் புராணங்களில் காணப்படும் கதைகள் மற்றும் மாயாஜாலங்கள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது. மெடாவெர்ஸ் பொறுத்தவரை ஆல்டர்நேட் உலகத்தை உருவாக்கும் தன்மைகொண்டதால், அது இந்தியாவிற்கு ஏற்ற ஒரு தொழில்நுட்பமாக இருக்கும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: 5G technology

அடுத்த செய்தி