ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

முதன் முறையாக ஸ்மார்ட் கூலிங் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அமையவிருக்கும் தரவு மையம்!

முதன் முறையாக ஸ்மார்ட் கூலிங் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அமையவிருக்கும் தரவு மையம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் இவ்வாறு தரவு மையங்களை அமைப்பதன் மூலம் சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும் அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட முடிவதுடன் வெளிநாடுகளில் தரவு மையங்கள் அமைப்பதால் ஏற்படும் செலவுகளை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போன்பே, என்டிடி மற்றும் டெல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் முதல் தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டத்தை துவங்கி வைத்தன.

வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான போன்பே எனும் பணம் பரிமாற்றம் செய்ய உதவும் நிறுவனமானது. கூகுள் பேசெயலிக்கு போட்டியாக இந்த செயலியும் பல்வேறு புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. பணபரிமாற்றம் செய்வதில் கூகுள்பே செயலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிறுவனமானது இந்தியாவில் 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1661 கோடி ரூபாயை தரவு மையங்கள் (Data centres) அமைப்பதற்கு முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியும் துணை நிறுவனறுமான ராகுல் சாரி கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த இந்த தரவு மையங்களை அமைப்பதற்கான துவக்க விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், போன்பே நிறுவனம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து விட்டது எனவும் மீதமுள்ள 50 மில்லியன் டாலர்களை எப்போது முதலீடு செய்யலாம் என்பதை பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் இவ்வாறு தரவு மையங்களை அமைப்பதன் மூலம் சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும் அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட முடிவதுடன் வெளிநாடுகளில் தரவு மையங்கள் அமைப்பதால் ஏற்படும் செலவுகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More : ஆன்லைன் அச்சுறுத்தல்களால் பயமா? பாதுகாக்க அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

இதைப் பற்றி பேசிய அந்நிறுவனத்தின் மற்றும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், ஏற்கனவே முதலீடு செய்துள்ள 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மூலம் 14 மெகாவாட் அளவுள்ள தரவு நிலையங்களை பெங்களூரு மற்றும் மும்பையில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம், தற்போது செய்யப்படும் பண பரிமாற்றங்களின் தகவல்களை சேகரித்து வைப்பதற்கு போதுமானதாக உள்ளதாகவும் இந்த திட்டமானது இந்த வருடத்தின் இறுதியில் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

போன்பே செயலியானது ஒரு நாளைக்கு 120 மில்லியன் அளவிலான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. அதில் ஒரு நொடியில் அதிகபட்சமாக 7000 பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த வருடத்தின் இறுதியில் இந்த 120 மில்லியன் ஆனது ஒரு நாளைக்கு 200 மில்லியன் என்ற கணக்கில் உயர கூடும் என்றும், அதுவே அடுத்த வருட இறுதியில் கணக்கிடுகையில் ஒரு நாளைக்கு 500 மில்லியன் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதில் போன்பே, என் டி டி மற்றும் டெல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் ஸ்மார்ட் கூலிங் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டத்தை துவங்கி வைத்தனர். தற்போது உள்ள நிலவரத்தின்படி ஸ்மார்ட் கூலிங் தொழில்நுட்பத்திற்காக அதிக செலவாகும் எனவும், ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அதற்கான பராமரிப்பு செலவு ஸ்மார்ட் கூலிங் இல்லாத தரவு மையங்களை விட மிக குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Technology