இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு(CERT-In) இந்த வாரம் மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் வெப் பிரவுசரில் ஏற்படும் பாதுகாப்பின்மை தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துள்ளது.
இணையதள பட்டியலில் உலகளவில் மூன்றாவது பிரபலமான இணைய பிரவுசராக மாறியுள்ள மைக்ரோசாப்ட் எட்ஜ் மெல்ல மெல்ல விண்டோஸ் பயனர்களுக்கு விருப்பமான இணைய பிரவுசராக மாறி வருகிறது. இந்நிலையில், விண்டோஸ் கணினிகளில் இயங்கும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரின் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் பலவீனமாக இருந்து வருவதை CERT-In கண்டறிந்துள்ளது.
இதையும் படிங்க: இனி படங்களை தேடவேண்டாம்... கதையை சொன்னால் போதும்... செயற்கை நுண்ணறிவே படத்தை உருவாக்கும்!
இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள கணினிகள் இந்த சிக்கலை சந்தித்து வருகிறது. அதோடு புதிய எச்சரிக்கை உயர் தீவிர மதிப்பீட்டில் குறிக்கப்பட்டுள்ளது. உங்கள் கணினியில் எட்ஜ் பிரவுசர் பாதிக்கபட்டால் அதை சரி செய்ய செயலியை புதுப்பித்தால் மட்டுமே முடியும் என்று நிலைக்கு மக்களை தள்ளிவிடும் என்று CERT-In எச்சரித்துள்ளது.
"இந்த பாதிப்புகள் குரோமியம் அடிப்படையிலான மைக்ரோசாஃப்ட் எட்ஜில் உள்ளன. மைக்ரோசாப்ட் எட்ஜில் உள்ள தவறால் வெகுதொலைவில் இருந்துகூட ஒருவர் உங்களது கணினியை எளிதாக ஹேக் செய்து அதில் உள்ள தரவுகளை மிக எளிதாக கையாள முடியும்; திருட முடியும். மேலும் இந்த மால்வேர் அட்டாக் கணினியின் பாதுகாப்பை முற்றிலும் கேள்விக்குறியாக்கும்" என்று CERT-In பதிவு குறிப்பிட்டுள்ளது.
109.0.1518.61 க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர்கள் இந்த பாதுகாப்புச் சிக்கலின் அபாயத்தை கொண்டுள்ளன. இதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருக்கும் பயனர்கள் எளிதாக மால்வேர்களுக்குள் சிக்கிக்கொள்வர். அதனால் தங்களது பிரவுசரின் பதிப்பை சரிபார்த்து உடனே மேன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
உங்கள் கணினியைப் பாதுகாப்பது எப்படி?
நல்ல செய்தி என்னவென்றால், இந்தப் பாதுகாப்புப் பாதிப்பைத் தடுக்க மைக்ரோசாப்ட் ஏற்கனவே ஒரு அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. அதன்படி மைக்ரோசாப்ட் வழியாக கிடைக்கும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் 109.0.1518.61 வெர்ஷன் உங்கள் கணினியை மால்வார்களில் சிக்காமல் பாதுகாக்கும்.
உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்ன பதிப்பு என்று தெரிந்து கொள்ள வலது மூலையில் உள்ள செட்டிங்கை தேர்ந்தெடுக்கவும். அதில் About Microsoft Edge என்பதை திறந்தால் உங்களது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பதிப்பு என்னவென்று தெரியும். பின்னர் அதை மேம்படுத்திக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Microsoft, Microsoft Edge