செல்ஃபி ஃபில்டர்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள் - கூகுள் நடத்திய ஆய்வு கூறுவதென்ன?

செல்ஃபி ஃபில்டர்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள் - கூகுள் நடத்திய ஆய்வு கூறுவதென்ன?

ஆண்ட்ராய்டு சாதனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை செல்ஃபி கேமரா கொண்டு எடுக்கப்பட்டவை. இந்தியர்கள் ஆக்ட்டிவாக செல்ஃபி எடுப்பவர்கள், அதை பிறருக்கு பகிர்பவர்கள். ஃபில்டர்கள் என்பது தம் தோற்றத்தை சிறந்ததாக வழங்குவதற்கு உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

  • Share this:
ஸ்மார்ட்போனின் பியூட்டி ஃபில்டர்ஸ் மூலம் பலரும் ஏகப்பட்ட செல்ஃபிக்களை எடுத்து வருகின்றனர். தற்போதைய உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவேற்றங்கள் போன்ற அனைத்திலும் மக்கள் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள விரும்புவதே இதற்கு காரணம். உலகளாவிய அளவில் கூகுள் நடத்திய ஆய்வு, செல்ஃபிக்களை மேம்படுத்த ஃபில்டர்களைப் பயன்படுத்துவது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பரவலாக உள்ளதாக கூறியது.

செல்ஃபி எடுப்பதும் பகிர்வதும் இந்திய பெண்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாகும், இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் வீட்டு வேலைகளையும் பாதிக்கிறது என்கிறார்கள். இந்த ஆய்வின்போது ஜெர்மனியர்களைப் போலல்லாமல் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஃபில்டர்களின் தாக்கம் என்ன என்பது குறித்து போதிய அளவு கவலையை வெளிப்படுத்தவில்லை. மேலும், அழகுபடுத்தும் நோக்கங்களுக்காக ஃபில்டர் ஆப்ஸ் தென்கொரியாவில் மிகவும் இயல்பாக்கப்பட்டு சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை செல்ஃபி கேமரா (front-facing camera) கொண்டு எடுக்கப்பட்டவை. இந்தியர்கள் ஆக்ட்டிவாக செல்ஃபி எடுப்பவர்கள், அதை பிறருக்கு பகிர்பவர்கள். ஃபில்டர்கள் என்பது தம் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்ததாக வழங்குவதற்கும் உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பெண்களே தாம் விரும்பிய தோற்றத்தை அடைய பல்வேறு வகையான ஃபில்டர் ஆப்ஸ்கள் மற்றும் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் பிரபலமான ஃபில்டர் ஆப்ஸ்களான PicsArt மற்றும் Makeup Plus, Snapchat-ஐ இளம் வயது பயனர்கள் (வயது 29 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) பயன்படுத்துகின்றனர், என்றும் கூகுள் கூறியது. ”பல பெண்கள் தாங்கள் ஒரு செல்ஃபி எடுக்க உடுத்தியிருந்த ஆடையை இன்னொருமுறை அணிய மாட்டார்கள்" என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

Also read: குழந்தைகள் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிறார்கள் என்று அச்சமா? பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இதோ..

இந்த ஆய்வில் ஒரு இளம் பெண், ”நான் என் அம்மாவிடம் சொன்னேன், நான் இந்த ஆடையை இனி ஒருபோதும் அணிய மாட்டேன். ஏனெனில் அந்த ஆடையுடன் ஒரு செல்ஃபியை ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு அந்த பெண்ணின் தாய், பணம் என்ன மரத்தில் காய்கிறதா என்று கேட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய ஆண்களும் ஆக்ட்டிவாக செல்பி எடுப்பவர்கள், ஃபில்டர்களைப் பயன்படுத்துபவர்கள். ஆனால் அவர்கள் தங்களது தோற்றத்தை விட கேப்சன் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்களாம்.

போன் கேமராவின் குவேலிட்டிக்கு இந்திய பயனர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். புதிய போனைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் இந்த அம்சத்தையே கவனிக்கிறார்கள். இந்தியாவில் ஆண்களும் பெண்களும் தங்கள் போன் கேமராக்களில் ஆட்டோமேட்டிக் பியூடிஃபிகேஷன் பங்ஷன் இருப்பதை விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் வயதானவர்கள் ஃபில்டர்களை குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறது கூகுள் ஆய்வு. தென் கொரிய பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் தங்கள் ஃபில்டர்களில் கண் அளவு, முக வடிவம், தோல் தொனி ஆகியவற்றை மாற்றுவதற்கு ஏதுவான ஆப்களை பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு சாதனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை செல்ஃபி என்றும் 24 பில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் கூகுள் புகைப்படங்களில் செல்ஃபிக்களாக பதிவேறப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: